தமிழ் சினிமா ரீவைண்ட்: பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் த்ரில்லர் படம்.. மே 8 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் த்ரில்லர் படம்.. மே 8 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

தமிழ் சினிமா ரீவைண்ட்: பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் த்ரில்லர் படம்.. மே 8 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 08, 2025 06:00 AM IST

மே 8ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் விஜய், விஜய் ஆண்டனி நடித்த படங்கள் மற்றும் பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் த்ரில்லர் படம் வெளியாகியுள்ளது. முந்தைய ஆண்டுகளில் இந்த நாளில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈரத்த படங்கள் இந்த படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் த்ரில்லர் படம்.. மே 8 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் த்ரில்லர் படம்.. மே 8 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

புதிய கீதை

கே.பி. ஜெகன் இயக்கத்தில் விஜய், மீரா ஜாஸ்மின், அமிஷா படேல், கலாபவன் மணி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்சன் ட்ராமா பாணியில் உருவாகி 2003இல் ரிலீசான படம் புதிய கீதை. இந்த படத்துக்கு முதலில் கீதை என தலைப்பு வைக்கபட்ட நிலையில், இந்து அமைப்புகளால் ஆட்சோபனை தெரிவிக்கப்பட்டது. பின்னர் புதிய கீதை என பெயர் மாற்றி ரிலீஸ் செய்யப்பட்டது.

மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய்யின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி முதல் முறையாக இந்த படத்தில் தான் இணைந்தனர். யுவனின் அண்ணன் கார்த்திக் ராஜா படத்தின் பின்னணி இசை மேற்கொண்டார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி எஃப்களில் அதிக முறை ஒலித்த பாடல்களாக அமைந்தன. எவ்வித திருப்பங்களும் இல்லாமலும், யுகிக்கூடிய வகையிலும் இருந்த படத்தின் திரைக்கதை காரணமாக படம் வெற்றியை பெறாமல் போனது

இந்தியா பாகிஸ்தான்

என். ஆனந்த் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், ஜெகன், பசுபதி, எம்.எஸ். பாஸ்கர் உள்பட பலர் நடித்து ரெமாண்டிக் காமெடி படமாக உருவாகி 2015இல் ரிலீசான படம் இந்தியா பாகிஸ்தான். டைட்டிலுக்கு ஏற்ப ஹீரோ, ஹீரோயின் இடையிலான மோதலும், பின்னர் மலரும் காதலும் மையமாக வைத்து வயிறு குலுக்க சிரிக்க வைக்கும் காமெடியுடன் கூடிய திரைக்கதை கொண்ட படமாக இருந்தது.

கோடை விடுமுறை ரிலீசாக வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் பெற்றது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த ரொமாண்டிக் காமெடி படங்களில் ஒன்றாக இந்த படம் இருந்து வருகிறது

விடியும் வரை காத்திரு

பாக்யராஜ் இயக்கி நடித்து சத்யகலா, கராத்தே மணி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து த்ரில்லர் படமாக உருவாகி 1981இல் ரிலீசான படம் விடியும் வரை காத்திரும். பேமிலி ட்ராமா படங்களை இயக்கி வந்த பாக்யராஜ் வித்தியாசமாக த்ரில்லர் ஜானரில் சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கினார். படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் பாக்யராஜ் அப்பாவி போல் தோன்றி, வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டியிருப்பார்.

படத்தின் இரண்டாம் பகுதியில் ஹீரோயினை கொல்ல பாக்யராஜ் சதித்திட்டம் தீட்டி முயற்சிக்கும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன. பார்வையாளர்களுக்கு வித்தியமான அனுபவத்தை கொடுத்த அந்த காட்சி, இளையராஜாவின் பின்னணி இசையால் சீட் நுனிக்கு வரவழைக்கும் காட்சியாக அமைந்தது.

இந்த படத்துக்கு முன் ரிலீசான மெளன கீதங்கள் படத்தில் விவாகரத்து பெற்ற தனது மனைவியின் குடும்பத்தை கணிவோடு கவனித்து கொள்ளும் கதாபாத்திரத்தில் தோன்றிய பாக்யராஜ், இந்த படத்தில் அதற்கு நேர் மாறாக மனைவியை கொலை செய்யும் கேரக்டரில் தோன்றியிருப்பார். இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் படம் ஹிட்டாகி, 80ஸ் காலகட்டத்தில் வந்த தரமான த்ரில்லர் படமாக மாறியது.