தமிழ் சினிமா உலகின் அற்புதமான ஆண்டு! வரிசை கட்டிய சூப்பர் ஹிட் படங்கள்! 2024 ஆம் ஆண்டின் சிறந்த படங்கள்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்தது என கூறலாம்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்தது என கூறலாம். அந்த அளவிற்கு 2024 ஆம் ஆண்டில் பல படங்கள் வெளியாகி வசூலிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உள்ள நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இன்னும் ஒரு சில படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு இதுவரை வெளியாகியுள்ள படங்களில் சிறந்த படங்கள் பல உள்ளன.
கலையே மனிதனின் பெரும் பொழுது போக்காக இருந்து வருகிறது. ஆதிக்குடி தமிழன் தொடங்கி தற்போது இயங்கும் டிஜிட்டல் தமிழன் வரை அனைவருக்கும் கலை ஒரு சிறந்த பொழுது போக்காகும். எனவே இந்த பொழுதுபோக்கின் சாராம்சமாக கருதப்படும் திரைப்படங்கள் பெரும் வெற்றி அடைந்துள்ளன. தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ள நிலையில் பல படங்கள் ரசிகர்களின் மனதை ஆட்கொண்டு உள்ளது. ரஜினி, விஜய், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களும் ஹிட் அடிக்க தவறவில்லை. இந்த வரிசையில் இந்த ஆண்டு சிறந்த படங்களாக வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற படங்களை காண்போம்.
இயக்குநர்களின் ஆண்டு
இந்த 2024 வது வருடம் இயக்குனர்களுக்கான ஆண்டு எனவே கருத வேண்டும். ஏனெனில் இந்த வருடம் பல இயக்குனர்களின் ஆகச்சிறந்த படைப்புகளை தந்துள்ளனர் பலருக்கு இடம் உண்டு. முதலில் நடிகராக இருந்து இயக்குனராக களம் இறங்கிய தனுஷ் நடித்து இயக்கிய அவரது ஐம்பதாவது திரைப்படமான “ராயன்” இப்படத்தில் சந்தீப் கிஷோன், காளிதாஸ், துஷாரா விஜயம், அபர்ணா பாலமுரளி மற்றும் செல்வராகவன் உட்பட பலரும் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தை கொண்டுள்ள இப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது இருப்பினும் ஒரு சில கதை திருப்பங்களால் ரசிகர்களிடையே சில விமர்சனங்களையும் பெற்றிருந்தது.