கூட்டணி வைத்த பார்கோ மற்றும் பிரசாத்.. வந்திறங்கிய HDR புரொஜக்ஷன் கலர் கிரேடிங் வசதி! - என்னென்ன அம்சங்கள் இருக்கு?
பார்கோ மற்றும் பிரசாத் இணைந்து இந்தியாவின் முதல் HDR புரொஜக்ஷன் கலர் கிரேடிங் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

கூட்டணி வைத்த பார்கோ மற்றும் பிரசாத்.. வந்திறங்கிய HDR புரொஜக்ஷன் கலர் கிரேடிங் வசதி! - என்னென்ன அம்சங்கள் இருக்கு?
லேசர் சினிமாவில் உலகளாவிய முன்னணி நிறுவனமான பார்கோவும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் முன்னோடி நிறுவனமாக இருக்கும் பிரசாத் பிலிம் லேப்ஸும் இணைந்து முதல் HDR வண்ண தரப்படுத்தல் (HDR Projection Color Grading ) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரசாத்தின் அதிநவீன தரப்படுத்தல் தொகுப்பு, பார்கோவின் HDR லைட்பாக்ஸ் மற்றும் பார்கோ LS4K-P HDR லைட் ஸ்டீயரிங் புரொஜக்டர் உள்ளிட்ட பார்கோவின் HDR லைட் ஸ்டீயரிங் தொழில்நுட்ப கருவித்தொகுப்பால் இயக்கப்படுகிறது.
போஸ்ட் புரொடக்ஷன்
இது திரைப்படத் தயாரிப்பாளரின் போஸ்ட் புரொடக்ஷனை பகுதியை இன்னும் மேம்படுத்துவதற்கும், திரையரங்குகளில் படம் சரியாக திரையில் வழங்கப்படுவதையும் உறுதி செய்கிறது.