GV Prakash: 4 வருடமாக நீடித்த பிரச்னை.. ஜி.வி.பிரகாஷ் விவாகரத்துக்கு பின்னால் இருக்கும் காரணத்தை விளக்கிய பயில்வான்
GV Prakash: நான்கு ஆண்டுகளாக ஜி. வி. பிரகாஷ் மற்றும் அவரது மனைவி இடையே பிரச்னைகள் இருப்பதாக திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் விவாகரத்துக்கு பின்னால் இருக்கும் காரணத்தை விளக்கிய பயில்வான்
GV Prakash: இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் விவாகரத்து செய்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். நான்கு ஆண்டுகளாக ஜி. வி. பிரகாஷ் மற்றும் அவரது மனைவி இடையே பிரச்னைகள் இருப்பதாக திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து உள்ளார்.
ஜி. வி. பிரகாஷை திருமணம் செய்ய சம்மதம் இல்லை
ஜி.வி.பிரகாஷ் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தொடங்கிய காதல் இது. இருவருமே மதம், சாதி பார்க்காமல் திருமணம் செய்து கொண்டார்கள். சைந்தவியின் குடும்பம் ஒரு மரபு வழிக் குடும்பம். அதனால், ஜி. வி. பிரகாஷை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை.