சூடு கண்ட பூனையாக இருக்கும் த்ரிஷா.. எச்சரிக்கையுடன் செயல்படும் விஜய் - கிசுகிசு பற்றி பயில்வான் பேச்சு
சூடு கண்ட பூனையாக த்ரிஷா இருக்கிறார். ஆனால் எச்சரிக்கையுடன் விஜய் செயல்படுகிறார் என விஜய் - த்ரிஷா உறவு குறித்து உலா வரும் வதந்தி பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

தளபதி விஜய் - த்ரிஷா இடையே சமீப காலமாக கிசுகிசுக்களும், இவர்களை இணைத்து பல்வேறு செய்திகளும் உலா வருகின்றன. சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு இருவரும் இணைந்து தனி விமானத்தில் செல்வதற்கு முன் விமான நிலையத்தில் வந்து விடியோக்களும் வைரல் ஆகின. இதன் பின்னர் விஜய் - த்ரிஷாவை இணைத்து தொடர்ந்து பல்வேறு வதந்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக நியூஸ்டன் தமிழ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, "விஜய் - த்ரிஷா குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பின்னரும் த்ரிஷாவுடனான தொடர்பை விஜய் விடவில்லை போல தெரிகிறது.
விஜய் - த்ரிஷா பற்ற உலாவும் வதந்திகள்
விஜய் அலுவலகத்துக்கு அருகிலேயே த்ரிஷா பிளாட் வாடகைக்கு எடுத்திருகிறார் எனவும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள் எனவும் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தாட்டில் திருமணத்துக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்கள்.