மகளை இழந்த துயரம்.. சித்ரா தந்தை சொன்ன கடைசி வார்த்தை - பயில்வான் சொன்ன விஜே சித்ராவின் மறுபக்கம்
மகளை இழந்தை துயரம் தாங்க முடியாமல் தான் சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், கலகலப்பான பெண்ணாக இருந்து வந்த விஜே சித்ரா தவறான தேர்வால் தனது உயிரையே மாய்ந்து கொண்டிருக்கலாம் எனவும் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஒய்வுபெற்ற காமராஜ், தனது மகள் சித்ரா இறந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து சித்ராவின் தந்தை மரணம் குறித்து, விஜே சித்ரா குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன். இதுகுறித்து அவர் கிங்ஸ் 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
"தற்கொலை கோழைகளின் கடைசி ஆயுதம். வாழ்க்கை வாழ்வதற்கே. எனக்கு விஜேயும், நடிகையுமான சித்ராவை நன்கு தெரியும். அவரது காரில் ப்ரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். அதுபற்றி அவரிடம் கேட்டபோது சிரித்தார்.
பின்னர் ப்ரஸ்ன்னா எந்த பத்திரிகையில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், என் அப்பா ஓய்வு பெற்ற போலீஸ்காரர். நான் பெண்ணாக இருப்பதால் பாதகாப்பு வேணும் என நினைத்தார். அதுக்காக ப்ரஸ் என ஸ்டிக்கர் ஒட்டச்சொன்னார். ஏனென்றால் டிவி சேனல்களில் வேலை செய்கிறீர்கள். இதுவும் ஒருவகையில் மீடியாதான் என சொல்லி ஒட்ட சொன்னதாக சொன்னார்.
கலகலப்பாக இருப்பவர் சித்ரா
எப்போதும் கலகலப்பாக பேசக்கூடியவர் விஜே சித்ரா. அருமையான முகம். அவரது சிரிப்பில் மனதில் நிற்கிறது.
சித்ரா நடிக்கும் சீரியலில் நடிகை நளினியும் நடித்தார். நளினி வீட்டில் இருந்து அவருக்கு சாப்பாடு வரும். அதேபோல் சித்ரா வீட்டில் இருந்து சிக்கன், மீன் என சமைத்து வரும். நளினி என்னை கொழுந்தனாரே என்று சொல்வார். அப்போது ஒரு முறை உணவு இடைவேளையின் போது சித்ராவிடம் பேசியபோது தனது குடும்பத்தை பற்றி பேசினார்.
சன் டிவியில் ஆங்கராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சன்டிவி சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியின் வழக்கப்படி சீரியலில் நடிப்பதாக இருந்தாலும் ஒப்புதல் பெற வேண்டும். கலகலப்பான பெண்ணாகவே இருந்த அவர் தானாவே கார் ஓட்டி ஸ்பாட்டுக்கு வருவது, பிரேக்கில் சென்று அனைவருக்கும் ஸ்நாக்ஸ் வாங்கி வருவது என இருந்துள்ளார்.
ரகசிய திருமணம்
ஒரு முறை நளினியிடம் லவ் செய்வதாக கூறினார். அது பர்சனல் விஷயம் என்பதால் நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அப்போதான் ஹேம்நாத் என்பதை சித்ரா லவ் செய்து வருகிறார் என்பது தெரிந்தது. அவருக்கு பாய்பிரண்ட்ஸ் இருந்தார்கள்.
ஹேம்நாத்திடம் நன்கு பழகி, அவர்கள் இருவரும் ரகசியம் திருமணம் செய்து கொண்டார்கள். திருவான்மியூர் ஆர்டிஓ ஆபிஸ் அருகே வீடு ஒன்றில் வசித்து வந்தார்கள். தனது ஏரியாக்களில் சிறிய சமூக சேவைகளும் செய்து வந்துள்ளார்.
திடீரென பூந்தமல்லியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது. இதுபற்றி விசாரிக்கையில், இறந்தது முந்தைய நாள் விஜய் டிவியில் புரொகிராமில் இருந்துள்ளார். வழக்கமாக அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் தனியாக விடுதியில் தங்கியிருந்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனடியாக தூக்கில் தொங்கியுள்ளார்.
பின்னர் சித்ராவின் தந்தை அளித்த புகாரில் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர். மூணு மாசம் வரை அவர் ஜெயிலில் இருந்தார். சித்ராவின் சம்பவம் நடந்து சில மாதம் கழித்து திருவான்மியூரில் பார் கவுன்சில் தலைவரை வேறொரு விஷயத்துக்காக சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் சித்ராவின் தந்தையை அறிமுகம் செய்தார்.
சித்ராவின் தந்தை கடைசியாக சொன்ன வார்த்தை
அப்போது அவர் பல விஷயங்களை செய்தார். ஆனால் அதை அப்போது சொல்ல முடியவில்லை. சித்ராவின் நினைவு நாள் இன்னும் சில நாள்கள் வர இருக்கும் நிலையில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானது. சித்ராவின் தந்தை உடல் அளவில் பிரச்னை இல்லாமல் இருந்தாலும், மனதளவில் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இரவு தூங்கி காலையில் எழுந்த அவரிடம் மனைவி காபி சாப்பிடுகிறீர்களா என கேட்டுள்ளார். அவர் இப்போ வேண்டாம் என சொல்லியுள்ளார். கடைசியாக அவர் சொன்னது இந்த வார்த்தை தான். மகளை இழந்த துயரத்தில் தான் அவர் தற்கொலை செய்துள்ளார். வேறு காரணங்கள் இருக்க முடியாது.
சித்ரா வீட்டில் மதுபாட்டில்கள், காண்டம்கள்
நல்ல நடிகையான சித்ரா தவறான வழியில் சென்று, தவறான துணையை தேர்ந்தெடுத்ததன் விளைவு தான் அவரது மறைவு. மகளுக்கு சரியான முறையில் வாழ்க்கையை சொல்லிக்கொடுக்காத மனஉளைச்சலில் தான் அவரது தந்தையும் தனது உயிரை மாய்த்து கொண்டார்.
சித்ரா வாழ்ந்த வீட்டில் மதுபாட்டில்கள், காண்டம்கள் இருந்ததாக சொன்னார்கள். ஹேநாத்தை திருமணம் செய்ய வேண்டாம் என எவ்வளவோ முறை சொன்னோம் என சித்ராவின் தோழிகள் கூறியதாக சொன்னார்கள். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் போனதுதான் அவரது வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டிய நிலைமை வந்தது. சித்ரா வழக்கை விசாரித்தது மகளிர் நீதிமன்றம். ஹேநாத் மீது தவறு இல்லை என தீர்ப்பு அளிக்கப்பட்டது. எனவே அதை விமர்சிக்க முடியாது"
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: KING 24x7
டாபிக்ஸ்