சிலுக்கு வேண்டாம்..மூன்று நாள் ஊர்வசியை பாடு படுத்திய பாக்யராஜ்!முருங்கக்காய் சீன் பின்னணி - பயில்வான் ரங்கநாதன் பகிர்வு
கிக்கான பாடலாக இருந்தாலும் சிலுக்கு வேண்டாம், எனது ஹீரோயினே போதும் என சொல்லி அந்த பாடாலை ஹிட்டாக்கினார் பாக்யராஜ். முந்தானை முடிச்சு முருங்கக்காய் வைத்தியர் வேடத்தில் நடிக்க பல பேர் போட்டி போட்டார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பயில்வான் ரங்நாதன். மூத்த பத்திரிகையாளராகவும் உள்ளார். சினிமாவில் நடக்கும் கிசுகிசுக்கள், நடிகர், நடிகைகள் பற்றி அறிந்திடாத பல்வேறு விஷயங்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து சர்ச்சையும் கிளப்பி வருகிறார்.
இதையடுத்து KING 24x7 பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இயக்குநர், நடிகர் பாக்யராஜ் குறித்த சில அறிந்திடாத தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பிரவீனா - பாக்யராஜ் இடையிலான காதல்
அதில், பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனா, முந்தானை முடிச்சு படத்தில் நடத்த சில சுவாரஸ்ய விஷயங்களை பேசியுள்ளார்.
அவர் தனது பேட்டியில், "அசோசியேட் இயக்குநராக இருந்த பாக்யராஜ், தெலுங்கு நடிகையான பிரவீனாவுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க சென்றார். அப்போது பிரவீனாவுக்கும், பாக்யராஜுக்கும் இடையே லவ் ஏற்பட்டது. பிரவீனாதான், பாக்யராஜை இயக்குநர் ஆகுமாறு சொல்லியுள்ளார். அவர்தான் தயாரிப்பாளராகவும் மாறி கைகொடுத்தார்.
முதல் படத்திலேயே ரிஸ்க் எடுத்த பாக்யராஜ், அது ஹிட்டாக அமைந்தது. தனது படத்தின் திரைக்கதை, வசனத்தை கிளைமாக்ஸ் தவிர பத்திரிகைகளில் வெளியிட்டார். பெரும்பாலும் புது கதாநாயகிகளை தனது படங்களை பயன்படுத்துவார். சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் போன்ற முரண்பட்ட தலைப்புகளால் கவனத்தை ஈர்த்து வெற்றியும் பெற்றார்.
சிலுக்கு வேண்டாம், ஊர்வசியே போதும்
முந்தானை முடிச்சு படத்தில் இடம்பிடித்த கண்ண திறக்கனும் சாமி என்ற கிக்கான பாடலில் சிலுக்கை டான்ஸ் ஆட வைக்குமாறும் படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கூறியுள்ளார். ஆனால் சிலுக்கு இல்லாமல் ஹீரோயினை வைத்தே அதுபோன்றதொரு மூடில் பாட்டை எடுப்பதாக சேலஞ் செய்து ஊர்வசியை மூன்று நாள் வரை பெண்டெடுத்து, பாடு படுத்தி அந்த பாடலில் ஆட வைத்திருப்பார். பாடலும் ரிலீஸுக்கு பின்னர் சூப்பர் ஹிட்டானது.
அதேபோல் கவர்ச்சி பாவையாக வலம் வந்த சிலுக்கை தனது படத்தில் மனைவியாக ஹோம்லி வேடத்தில் நடிக்க வைத்து அழகுபடுத்தினார். பிரவீனா, பாக்யராஜை பாவா பாவா என்றுதான் கூப்பிடுவார். பிரவீனா, அவரது அம்மா, தங்கை ஆகியோருடன் பாக்யராஜும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்தார். நான் பேச்சிலராக இருந்தபோது அவர்தான் போன் செய்து ஏவிஎம் ஸ்டுடியோவில் பாக்யராஜை பார்க்க சொன்னார்.
முருங்கக்காய் வைத்தியர் வேடம்
முருங்கக்காய் வைத்தியர் வேடத்தில் என்னை நடிக்க வைத்தார். இந்த கேரக்டருக்கு பலபேர் போட்டி போட்டிருந்தனர். ஆனால் பாக்யராஜ் என்னை நடிக்க வைத்தார்.
பாக்யராஜ் எழுதிய கதை ஒன்று காப்பியடிக்கப்பட்டதாக அவர் மீது வழக்கு ஒன்று இருந்தது. நான் எழுதிய ஒரு கட்டுரை அவர் வழக்கிலிருந்து ஜெயிக்க காரணமாக இருந்தது. அப்புறம் பிரவீனாவுடனும் எனக்கு இருந்த நட்பு மூலம் முருங்கக்காய் வைத்தியராக நடிக்க வைத்தார்.
23 வயதில் 65 வயசு கிழவனா என்னை நடிக்க வைத்தார். இதனாலேயே எனக்கு பெண் கொடுக்காமல் இருந்தார். பைட்டராக இருந்த என்னை காமெடியனாக மாற்றியது அவர்தான். முரட்டு ஆளான பாக்யராஜ் 100வது நாள் விழாவில் பாக்யராஜ் காலில் விழுந்து கும்பிட்டேன்.
பூர்ணிமாவுடன் லிவிங் டூ கெதர்
முந்தானை முடிச்சு நேரத்திலேயே பூர்ணிமா - பாக்யராஜ் இடையே லிங்க் ஏற்பட்டது. அதன் பின்னர் டார்லிங் டார்லிங் படத்தின்போது லிவிங் டூ கெதராக அவர்கள் உறவு மாறியது. அந்த நேரத்தில் உடல் பாதிப்பு ஏற்பட்டு பிரவினாவும் மறைந்தார். அப்போது பல்வேறு கிசுகிசுக்களும் வந்தன.
அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் தான் பாக்யராஜ் - பூர்ணிமாவுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்தார். ரஜினி, கமல் ஆக்ஷன் என கலக்கி கொண்டிருக்க பெண் ரசிகர்களை கவரும் விதமாக பாக்யராஜ் ஹிட் இயக்குநராக வலம் வந்தார்" என்றார்.

டாபிக்ஸ்