Namitha: தவறான பாதையில் நமீதா? - கேள்விக்குறியாக நிற்கும் திருமண வாழ்க்கை?
நமீதா தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
தென்னிந்திய திரையுலகில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நமீதா. கிளாமர் ஹீரோயினாக வலம் வந்த நமீதா, விரைவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
தமிழில் அதிக படங்களில் நடித்தார். குஜராத்தின் சூரத்தில் பிறந்து வளர்ந்த நமீதா, மாடலிங்கில் தனது இருப்பை வெளிப்படுத்திய பிறகு திரையுலகில் நுழைந்தார்.
2001 முதல் 2008 வரை நமீதாவின் கேரியரின் பொற்காலமாக இருந்தது. நமீதா இன்று சினிமா துறையில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நமீதா, எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனையடுத்து அவர் பில்லா, ஐயா, அழகிய தமிழ் மகன் போன்ற வெற்றிப் படங்களில் அஜித் , விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் . பல படங்களில் கிளாமராக வலம் வந்த நமீதா, சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபோது பி க்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் ஆந்திராவைச் சேர்ந்த வீரேந்திர சவுத்ரி என்பவரை 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
2022 ஆம் ஆண்டு நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. நமிதா அடிக்கடி தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிடுவார்.
இதற்கிடையில் சமூக சேவை , பொதுப்பணி என சந்தோசமாக குடும்பத்தையும் நடந்தி வந்த நமீதாவுக்கு அதிர்ச்சியாக கணவரின் தவறான செயல்களால் பல இன்னல்களை சந்தித்து வந்தார்.
சேலத்தைச் சேர்ந்த பெண் , தனது கணவர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தார். கூடுதல் போனஸாக, காதல் கணவருடன் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த நமீதா, போதைப்பொருள் கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக நமீதா தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
ஆனால் இது பற்றி நமிதா அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. அதனால் திரைப்பட விமர்சகர் பைல்வான் பகிர்ந்த விஷயம் உண்மையா என இன்னும் தெரியவில்லை.
நமீதா இன்று மீண்டும் லைம்லைட்டுக்கு வர முயற்சிக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் நமீதாவின் இமேஜ் பாதிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக நமீதா நுழைந்தார். நிகழ்ச்சியில் ஓவியாவுடன் ஏற்பட்ட பிரச்னைகளுக்காக நமீதா விமர்சிக்கப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்