Bayilvan Ranganathan: மலேசிய கலைவிழாவில் நடந்த பிரச்சினை.. சட்டையை கழற்றிய அஜித்.. கண்ணீர் விட்ட கேப்டன்!
அஜித் இரண்டு மாதங்கள் கழித்து விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது நட்சத்திர கலைவிழாவிற்கு என்னால் வர முடியவில்லை; என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்றார். மேலும் வராத காரணத்திற்காக, ஒரு பெரிய தொகையை எடுத்து விஜயகாந்தின் கையில் கொடுத்திருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது நினைவிடத்திற்கு பலரும் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் அஜித் மட்டும் இன்னும் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. அதற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் மெட்ராஸ் மூவிஸ் சேனலில் அண்மையில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் விஜயகாந்த், மலேசியாவில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் அஜித் அந்த விழாவிற்கு வரவில்லை. இதில் அஜித் மீது கடும் கோபத்தில் இருந்தார் நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் நடிகர் அஜித்தை அவர் கிழி கிழி என கிழித்து தொங்க விட்டுவிட்டார்.
அஜித் இரண்டு மாதங்கள் கழித்து விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது நட்சத்திர கலைவிழாவிற்கு என்னால் வர முடியவில்லை; என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்றார். மேலும் வராத காரணத்திற்காக, ஒரு பெரிய தொகையை எடுத்து விஜயகாந்தின் கையில் கொடுத்திருக்கிறார்.
இதில் இன்னும் கோபமான விஜயகாந்த் இந்த பணத்திற்காக தான் நீ வராமல் இருந்தாயா?.. இல்லை எனக்கு இந்த பணம் தான் முக்கியமா..? என்று அஜித்தை திட்டி தீர்த்து இருக்கிறார் கேப்டன். இந்த நிலையில் நடிகர் அஜித் திடீரென்று சட்டையை அவிழ்த்து இருக்கிறார். அப்போது அவரது முதுகில் ஆபரேஷன் செய்திருந்தது தெரியவந்தது.
அஜித் விஜயகாந்த்திடம் நட்சத்திர கலைவிழா நடக்கும் பொழுது எனக்கு முதுகு தண்டில் ஆபரேஷன் நடந்தது. அப்போது நான் மருத்துவமனையில் இருந்தேன்; அதனால்தான் என்னால் வரமுடியவில்லை. இந்த விஷயத்தை உங்களிடம் சரியான முறையில் என்னால் தெரிவிக்க முடியவில்லை என்று சொன்னதுமே, விஜயகாந்த் கண்ணீர் விட்டு விட்டார். தொடர்ந்து அஜித்திடம் மன்னிப்புக் கேட்டு அவர் கொடுத்த தொகையையும் வாங்கி இருக்கிறார்." என்று பேசினார்.
டாபிக்ஸ்