தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bayilvan Ranganathan Latest Interview About Varalaxmi Sarathkumar

Bayilvan Ranganathan: வரலட்சுமி ஒரு ஆம்பள.. உலக அழகியை விவாகரத்து செய்த நிகோலய்’ - பயில்வான் ரங்கநாதன்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 06, 2024 06:45 AM IST

இரவு 12 மணி அளவில்தான் வரலட்சுமி சரத்குமார் வீட்டிற்கு செல்வார். அப்படிச் சொல்லும் பொழுது யாராவது தேவையில்லாத வகையில் சீண்டினால், அவர்களை நொறுக்கி விடுவார்.

வரலட்சுமி சரத்குமார்!
வரலட்சுமி சரத்குமார்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ வரலட்சுமியை நாம் ஆண் என்று அழைக்கலாம். சரத்குமார் எப்படி எல்லாவற்றையும் துணிந்து நின்று, எதிர்த்துப் போரிடுவாரோ அதே குணத்தை பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். 

இரவு 12 மணி அளவில்தான் வரலட்சுமி சரத்குமார் வீட்டிற்கு செல்வார். அப்படிச் சொல்லும் பொழுது யாராவது தேவையில்லாத வகையில் சீண்டினால், அவர்களை நொறுக்கி விடுவார். வரலட்சுமி சரத்குமார் நடுரோட்டில் நின்று சண்டையிடுவதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அளவு தைரியம் உள்ள பெண் வரலட்சுமி சரத்குமார். 

வரலட்சுமி சரத்குமாரின் தங்கை சினிமாவில் நடிக்கவில்லை ஆனால் வரலட்சுமி நடித்தார். வரலட்சுமிக்கு கல்யாணம் என்று செய்தி வெளியானது உண்மையில் மிகவும் ஷாக்காகத்தான் இருந்தது. 

காரணம் என்னவென்றால் வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது 38 வயதாகிறது. அவருடைய  கணவர் நிகோலயிற்கு 41 வயது ஆகிறது. அவர் மும்பையில் ஆர்ட் கேலரி வைத்திருக்கிறார். அவரது அப்பா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிசினஸை தற்போது இவர் எடுத்து நடத்தி வருகிறார். நிகோலய் கடந்த 11 வருடங்களுக்கு முன்னதாகவே கவிதா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். 

அவர் கலிபோர்னியா நாட்டு அழகி ஆவார். ஆனால் அவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள். இன்னொன்று நிகோலய் சரத்குமாருக்கு ஏற்ற மாப்பிள்ளைதான். காரணம், அவரும் பாடிபில்டர்தான்.”  என்று பேசினார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்