Bayilvan ranganathan: ‘உங்க அம்மாவ இப்படி பேசுவியா?.. பிடிக்கலைன்னா அன்ஃபாலோ பண்ணிட்டு போடா’ - வெளுத்த வரலட்சுமி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan Ranganathan: ‘உங்க அம்மாவ இப்படி பேசுவியா?.. பிடிக்கலைன்னா அன்ஃபாலோ பண்ணிட்டு போடா’ - வெளுத்த வரலட்சுமி!

Bayilvan ranganathan: ‘உங்க அம்மாவ இப்படி பேசுவியா?.. பிடிக்கலைன்னா அன்ஃபாலோ பண்ணிட்டு போடா’ - வெளுத்த வரலட்சுமி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 06, 2024 07:00 AM IST

‘உங்களுக்கு ஒருவர் பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து விட்டு விடுங்கள். நீங்கள் அவரை அன்ஃபாலோ செய்து விட்டு போய்க்கொண்டே இருக்கலாமே? எதற்காக அவரை பாலோ செய்து, அவருக்கு கமெண்ட் அடித்து, கஷ்டப்படுத்த வேண்டும்.’ - வரலட்சுமி!

வரலட்சுமி சரத்குமார்!
வரலட்சுமி சரத்குமார்!

அவர் பேசும் போது, “ நெகட்டிவாக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிடும் நபர்களை பார்த்து நான் ஒன்றே ஒன்று தான் கேட்க விரும்புகிறேன். உங்களுடைய அம்மாவையோ, தங்கையையோ அல்லது குடும்பத்தில் உள்ள பெண்களையோ இவ்வாறு பேசுவீர்களா? 

உங்களுக்கு ஒருவர் பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து விட்டு விடுங்கள். நீங்கள் அவரை அன்ஃபாலோ செய்து விட்டு போய்க்கொண்டே இருக்கலாமே? எதற்காக அவரை பாலோ செய்து, அவருக்கு கமெண்ட் அடித்து, கஷ்டப்படுத்த வேண்டும்.

உங்களை நாங்கள் பாலோ செய்ய கேட்டோமா என்ன..? நீங்கள்தான் ஃபாலோ செய்கிறீர்கள். அப்படி இருக்கையில், நாங்கள் பதிவிடும் பதிவுகள் பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் இல்லையென்றால். 

அப்படியே விட்டு சென்று விடுங்கள். அது உங்கள் விருப்பம். அங்கு கமெண்ட் அடிப்பவர் முகம் தெரியாத ஆளாக இருக்கிறார். அப்படியான இடத்தில் இருந்து கொண்டு கமெண்ட் அடிப்பவருக்கு என்ன தைரியம் இருக்கிறது.

உண்மையிலேயே உங்களுக்கு கமெண்ட் அடிக்க வேண்டும் என்றால், நேருக்கு நேராக வந்து கமெண்ட் அடியுங்கள்.. நேருக்கு நேராக பேச தைரியம் இல்லாதவன் என்னை பொறுத்தவரை ஒரு கோழை. கோழையிடம் எனக்கு பேச எனக்கு விருப்பமில்லை அவனிடம் எனக்கு வேலையும் இல்லை” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.