Bayilvan Ranganathan: ‘கருப்பான நடிகரே வேண்டாம்’.. நிராகரித்த நதியா.. பழிதீர்த்து பாடம் புகட்டிய விஜயகாந்த்!
படப்பிடிப்பில் இருக்கும் போது இயக்குநர்கள் யாராவது அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க வற்புறுத்தினால், மிகவும் கறாராக, நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன்.. இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விடுவார்.

நடிகை நதியாவிற்கும், விஜயகாந்திற்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து பயில்வான் ரங்கநாதன் நியூஸ்9தமிழ்நாடு சேனலுக்கு சில வருடங்களுக்கு முன்னர் பேசி இருந்தார்.
அவர் பேசும் போது, “நடிகை நதியா கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்தவர். முதல் முதலாக அவர் நடித்த பூவே பூச்சூடவா திரைப்படம் வெற்றி பெற்றது. அந்த காலத்தில் எப்படி குஷ்புவுக்கு அதிக ரசிகர்கள் இருந்தார்களோ, அதே போல நதியாவிற்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தார்கள். நதியா நெக்லஸ், நதியா ஜாக்கெட் தின நதியாவின் பேரிலேயே பல பொருட்கள் விற்பனையாக தொடங்கின. அந்த அளவிற்கு ட்ரெண்டானார்.
நதியாவினுடைய ஃபேஷனை அன்று நிறைய பெண்கள் ஃபாலோ செய்தார்கள். நதியாவிற்கு அப்போதே தனிப்பட்ட முறையில் இருந்தார்கள். அதற்கு ஒரு காரணம் இருந்தது, அது என்னவென்றால், கதாநாயகிகள் பலர் கிளாமராக நடித்துக் கொண்டிருந்த நிலையில், கிளாமருக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்று சொல்லி, அதிலிருந்து சற்று தள்ளியே இருந்தவர் நடிகை நதியா. அவரின் மீது மக்களுக்கு ஒரு வித நல்ல அபிப்ராயம் உருவாவதற்கு இது ஒரு காரணமாக அமைந்தது.
படப்பிடிப்பில் இருக்கும் போது இயக்குநர்கள் யாராவது அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க வற்புறுத்தினால், மிகவும் கறாராக, நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன்.. இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விடுவார்.
நதியாவை பொருத்தவரை அவரது திரைத்துறை வாழ்வில் ஒரு விஷம் இயல்பாக நடந்தது. அவர் நடித்த எல்லா ஹீரோக்களும் கருப்பானவர்களே. நதியாவிற்கு கருப்பான நடிகர் என்றாலே பிடிக்காது. உடனே நீங்கள் ரஜினி உடன் அவர் இணைந்து நடித்ததை குறிப்பிடுவீர்கள். அது எப்படி நடந்தது என்றால், சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடிக்காமல் இருந்தால், ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும. ஆகையாலே அவர் அந்த படத்தில் நடித்தார்.
இதனிடையே அவரை கேப்டன் விஜயகாந்திற்கு ஜோடியாக நடிக்க கேட்டார்கள். ஆனால் அவர் அதனை மறுத்துவிட்டார். இதற்கு பழிவாங்க நினைத்த விஜயகாந்த், கேரளாவிலிருந்து நாட்டிய பேரொளி ஷோபனாவை வரவழைத்து தன்னுடைய இரண்டு படங்களில் கமிட் செய்தார்
இந்த விவகாரத்தில் விஜயகாந்தின் நண்பர் தாவுத் எங்களுக்கு நதியா தான் வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை. காரணம், கேப்டனுக்கு என்ற ஒரு தனி மவுசு இருக்கிறது. அந்த படத்தில் நதியா இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அவ்வளவுதான் என்று சொன்னார்” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் அதிலிருக்கும் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் உடனக்குடன் தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்