Bayilvan Ranganathan:கார்த்தியை வெயிலில் காய வைத்த அமீர்.. கதறிய சிவகுமார்! - பயில்வான் பளார்!
பருத்திவீரன் பட பிரச்சினை குறித்து பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து பயில்வான் பேசும் போது, “பருத்திவீரன் திரைப்படம் என்று வெளியானதோ, அன்றிலிருந்து இந்த சர்ச்சையானது போய்க்கொண்டிருக்கிறது. சூர்யாவிற்கு அப்போது பெரிதாக நடிக்க தெரியாது. முகபாவனைகளை சரிவர வெளிப்படுத்த தெரியாது.
ட்ரெண்டிங் செய்திகள்
அவரது அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்திய படமாக மௌனம் பேசியதே அமைந்தது. இதில் சிவகுமாருக்கு அமீர் மீது பெரிய நம்பிக்கை உருவாகிவிட்டது. இந்த சமயத்தில் தான் அமீர் கார்த்தியை வைத்து பருத்தி வீரன் திரைப்படத்தை எடுக்க விரும்புவதாக சிவக்குமாரிடம் சொன்னார்.
ஆனால் சிவகுமார் சாரோ, அவனுக்கு தமிழே ஒழுங்காக பேச வராது என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அமீர் நான் டைரக்டர். என்னை நம்பி விடுங்கள் என்று சொல்ல, சிவகுமார் ஒத்துக் கொண்டார்.
கார்த்தி மிகவும் சிவப்பாக இருப்பார். ஆனால் அவரை பருத்திவீரன் திரைப்படத்திற்காக வெயிலில் நிற்க வைத்து கருப்பாக மாற்றினார் அமீர். இந்த தோற்றத்தை பார்த்த சிவகுமார் அவரது மனைவியும் கார்த்தியை பார்த்து அழுதுவிட்டார்கள். இதில் சிவகுமார் குடும்பத்திற்கும், அமீருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை சிவகுமார் குடும்பம் பார்க்கும் பொழுது அவர்களுக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை. இதனை அமீரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்தார்கள். காரணம், இயக்குனர் என்பவருக்கு இயல்பாகவே அகம்பாவமும், திமிரும் இருக்கும். அதன் பின்னர் அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை” என்று பேசினார்.
டாபிக்ஸ்