Bayilvan Ranganathan: பாசத்திற்காக ஏங்கிய அஜித்.. படப்பிடிப்பில் பறந்த காதல் கடிதங்கள்.. முற்றுப்புள்ளி வைத்த ஷாலினி!
அஜித்திற்கும் ஹீராவுக்கு இடையே இருந்த காதல் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “அந்த சமயத்தில் அஜித்குமார் பாசத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்தார். அதன் காரணமாக அவர் அடிக்கடி காதல் வலையில் விழுந்தார். அவர் முதன்முறையாக ஜோடியாக நடித்த நடிகையை பெண் கேட்டு, அண்ணாநகரில் உள்ள வீட்டில் பெண் கேட்டு சென்றார். ஆனால் அவரின் அம்மா அந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வில்லை.
அதனைத்தொடர்ந்து அஜித் தொடரும் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் இயக்குநர் ரமேஷ் கண்ணா. அந்தப்படத்தில் அவருடன் நடித்த கீரா ராஜகோபாலுக்கு காதல் கடிதங்களை எழுதிய அனுப்பினார் நடிகர் அஜித். ஒரு முறை இவ்வாறு எழுதிய கடிதம் ஒன்றை நான் ரமேஷ் கண்ணாவிடம் எடுத்துக்கொண்டு சென்ற போது, அவர் எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியும் என்று சொன்னார்.
அந்த சமயத் தில் ஹீரா ராஜகோபாலை சுற்றி சுற்றி காதலித்து வந்தவர் நடிகர் சரத்குமார். இதனை தெரிந்து கொண்ட அஜித், அந்த காதலில் இருந்தும் விடுபட்டார். அதன் பின்னர் அமர்க்களம் படத்தில் , நடிகை ஷாலினியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்போதுதான் அஜித்திற்கும் ஷாலினிக்கும் இடையே காதல் உருவானது.
இது குறித்து ஷாலினி, தன் அப்பாவிடம் வந்து பேசுங்கள் என்று சொல்ல, அவரிடம் சென்று பேசினார் அஜித். ஷாலினியின் அப்பா ஒரு இஸ்லாமியர். மிகவும் கண்டிப்பானவர். அவரிடம், மிகவும் இறங்கி பேசி, சம்மதம் வாங்கினார் அஜித். இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம் என மூன்று மத முறைகளிலும் இவர்கள் திருமணம் நடந்தது” என்று பேசினார்.

டாபிக்ஸ்