Bayilvan Ranganathan: மது…மாது…விருந்து.. நடிகைகளை கடித்துக்குதறிய எம்.எல்.ஏக்கள்?கூவத்தூரில் நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan Ranganathan: மது…மாது…விருந்து.. நடிகைகளை கடித்துக்குதறிய எம்.எல்.ஏக்கள்?கூவத்தூரில் நடந்தது என்ன?

Bayilvan Ranganathan: மது…மாது…விருந்து.. நடிகைகளை கடித்துக்குதறிய எம்.எல்.ஏக்கள்?கூவத்தூரில் நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 22, 2024 05:30 AM IST

அப்போது கட்சியின் சீனியராக இருந்த செங்கோட்டையனிடம் இந்த காய் நகர்ந்தது. ஆனால் அவரோ என்னால் உடனடியாக பணத்தை ரெடி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.

நடிகை த்ரிஷா விவகாரம்!
நடிகை த்ரிஷா விவகாரம்!

இந்த நிலையில் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் நடந்தது என்ன என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன், செய்தியாளர் பாண்டியன் ஆகியோர் பேட்டிகள் கொடுத்தனர். அதன் தொகுப்பே இந்தக்கட்டுரை!

பயில்வான் ரங்கநாதன் பேசும் போது, “ஜெயலலிதா சென்ற பின்னர், முதல்வர் பதவிக்கு சசிகலா வந்த பொழுது, அவர் என்னால் தற்போது இந்த பதவியை ஏற்க முடியாது. யார் பணம் செலவழிக்க தயாராக இருக்கிறீர்களோ அவர்கள் முன் வாருங்கள் என்றார். 

அப்போது கட்சியின் சீனியராக இருந்த செங்கோட்டையனிடம் இந்த காய் நகர்ந்தது. ஆனால் அவரோ என்னால் உடனடியாக பணத்தை ரெடி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். 

இந்த நிலையில்தான் அந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி வந்து நின்று, தான் பணம் செலவழிப்பதாக சொன்னார். தொடர்ந்து எம்எல்ஏக்களை தன்னுடைய கஸ்டடியில் வைக்க, கூவத்தூரில் உள்ள நட்சத்திர பங்களாவில் ரூம்களையும் போட்டுக்கொடுத்தார். 

அங்கு சென்ற எம்எல்ஏக்கள் குடித்துவிட்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு, கும்மாளம் அடித்தார்கள். கூடவே தங்களுக்கு பெண்களையும் விருந்து வைக்குமாறு கேட்டார்கள். 

அதுவும் அவர்கள் விருப்பப்பட்ட பெண்களை வேண்டுமென்று அடம்பிடித்தார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் கருணாஸ் என்றும் அப்போதே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. 

பாண்டியன் பேசும் போது, “அதற்காக கருணாஸிடம்  10 கோடி கை மாறியதாகவும் சொல்லப்படுகிறது. துணை நடிகைகள் இல்லாமல் கூவத்தூரில் அந்த இரவானது கழியவில்லை. அங்கு சென்ற துணை நடிகைகள் அங்கிருந்த எம்எல்ஏக்கள் தங்களிடம் கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்றும் காமத்தின் போது அவர்கள் விலங்குகள் போல கடித்து வைத்தார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்” என்று பேசினார்.