‘மாலை மாத்துனதும் எதுக்கு லாட்ஜ்க்கு போகணும்..? ப்ளே பண்ணது சீமான் தந்திரம்.. ஏமாந்தது விஜி’ பயில்வான் புது தகவல்!
Bayilvan Ranganathan: ‘கெட்டிக்காரத்தனமா சீமான் ப்ளே பண்ணிருக்கார். ஏமாந்தது விஜயலட்சுமி என்று சொல்லலாம்’

சீமான்-விஜயலட்சுமி விவகாரம் மீண்டும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நேற்று பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோஅவருடைய பேட்டி:
‘‘காசு, பணம், துட்டு தான்.. சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளிக்க காரணம். மாதம் மாதம் ரூ.50 ஆயிரம் போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த பணத்தை சீமான் நிறுத்திவிட்டார். இப்போ வந்து சத்தம் போடுது. நான் அனைத்தையும் படித்து முடித்த வகையில் எனக்கு தெரிந்த தகவல் இது தான்.
ஆனால் ஒன்று, சீமான்-விஜயலட்சுமி திருமணம் செய்ததற்கான ஆதாரம் இல்லவே இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டால் அது திருமணம் ஆகாது. கெட்டிக்காரத்தனமா சீமான் ப்ளே பண்ணிருக்கார். ஏமாந்தது விஜயலட்சுமி என்று சொல்லலாம். அல்லது, ஏமாந்த மாதிரி நடிக்குதா என்று தெரியவில்லை.
மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றிய போட்டோ இருக்கு. அங்கேயே பதிவு திருமணம் செய்ய வசதி இருக்கு. இவ்வளவு விவரமா பேசும் விஜயலட்சுமி, அங்கு ஏன் பதிவு செய்யவில்லை? அது செல்லும் தானே. இது சீமானின் தந்திரம். மாலை மாற்றியதும் யாராவது முதலிரவுக்கு யாராவது ஏற்பாடு பண்ணுவாங்களா?
ஆதாரம் இல்லாமல் திருமணம் செய்துவிட்டு ஏன் லாட்ஜில் சாந்திமுகூர்த்தம் செய்ய வேண்டிய அவசியம் விஜயலட்சுமிக்கு என்ன? எதற்கு அந்தம்மா சம்மதித்தது? மதுரை செல்வத்திடம் எதுக்கு ரூ.3.5 லட்சம் வாங்கினார் விஜயலட்சுமி? வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் அனுப்பிய எல்லாம் இருக்கிறது.
சரி, நீ ஒரு புகார் கொடுக்குற, அப்புறம் எதுக்கு அதை திரும்ப வாங்குற? புகாரை வாங்க காரணம், அந்த புகார் அவர் மீது இல்லை என்று தானே அர்த்தம். 7 வருசத்திற்குப் முன் ஒரு புகார் கூறிவிட்டு, இன்று மறுபடி வந்தால், அது புது புகார் தான். 4 முறை வந்து பணம் வாங்கியிருக்கிறார். சீமானிடம் பணத்தை தான் விஜயலட்சுமி எதிர்பார்க்கிறார். அவரோட நோக்கம் அது தான்.
70 சதவீதம் விஜயலட்சுமி தப்பு செய்திருக்கு. 30 சதவீதம் சீமான் தப்பு செய்திருக்கிறார். பெண் சம்மதத்தோடு உடல் உறவு கொண்டால், அது தவறாகாது. இன்னொருவரின் மனைவி உடன் கூட, விருப்பத்தின் பேரில் உடலுறவு செய்யலாம், அதற்கு சட்டமே இருக்கு. தமிழ்நாட்டில் மனைவி, துனைவி என்பதெல்லாம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. அரசியல்வாதிகள் இதை பெரிதாக எடுப்பதில்லை.
விஜயலட்சுமிக்கு இது புதிதல்ல. இதுவரை 7 பேர் மீது இதுமாதிரி புகார் சொல்லியிருக்கிறார். கர்நாடக போலீசர், இனி இவர் எந்த புகார் கொடுத்தாலும் எடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இதுவரை இந்த விவகாரத்தை விஜயலட்சுமி மறுக்கவில்லை,’’
என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
(இவை அனைத்தும் பயில்வான் ரங்கநாதனின் சொந்த கருத்துக்கள் தான்)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
