'நடிகைங்க என்கிட்ட அரை நிர்வாண போட்டோ தருவாங்க.. சில்க் சுமிதாவால நிறைய சம்பாதிச்சேன்'- பயில்வான் பளார்
தான் பத்திரிகையாளராக இருந்த சமயத்தில் பல நடிகைகள் தன்னிடம் பச வாய்ப்புக்காக அவர்களது அரை நிர்வாண புகைப்படத்தை தருவார்கள் என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் கூறியுள்ளார்.
பொதுவாகவே சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர்களது அந்தரங்க ரகசியங்கள் குறித்தும் அதிகம் பேசிவருவார் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது கிங்ஸ் 24X7 யூடியூப் சேனலில் சில்க் சுமிதா பற்றியும், அவரால் பயில்வான் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
அரை நிர்வாண புகைப்படம் தரும் நடிகைகள்
அந்த வீடியோவில், பலரும் நடிகர் விணுச் சக்ரவர்த்தி தான் சில்க் சுமிதாவை சினிமாவிற்கு அழைத்து வந்தார் எனப் பேசிக் கொள்கிறார்கள், ஆனால் அது பொய். நான் மாயா எனும் பத்திரிகையில் ஆசிரியராக வேலை பார்த்த சமயத்தில், பல நடிகைகளும் வந்து என்னிடம் அவர்களின் அரை நிர்வாண புகைப்படங்களைத் தருவார்கள். இந்தப் படத்தை பத்திரிகையில் போட்டால், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்களுக்கு பட வாய்ப்புகளை வழங்குவார்கள் எனக் கூறி இவ்வாறு செய்வார்கள். நடிகைகள் சுமார் 1973ம் ஆண்டு முதலே இதுபோன்ற கவர்ச்சி படங்களைக் கொடுத்து வாய்ப்புத் தேட தொடங்கினர்.
உதவி நாடிய விணுச் சக்ரவர்த்தி
வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தான் விணுச் சக்ரவர்த்தி சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு முன் அவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக இருந்தார், அவர் அந்தப் படத்தில் கவர்ச்சியாக நடிக்கக் கூடிய பெண் நடிகை தேவை எனக் கூறி, எங்களது மாயா பத்திரிகையி்ல வெளியான நடிகையின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு, என் ஆபிஸிற்கு வந்துவிட்டார்.
சினிமாவில் அறிமுகமான சில்க்
பின் சில்க் சுமிதாவின் போட்டோவை கொடுத்த நபரிடம் விசாரித்து, சில்க் சுமிதாவின் வீட்டிற்கு சென்றோம். அப்போது அவரிடம் நடிரக்க ஒப்புதலும் வாங்கினோம். அந்தப் படத்தில் நடப்பதற்கு முன்வரை அவர் பெயர் சுஷ்மிதா என அவரே வைத்துக் கொண்டார். அந்தப் படத்தில் நடித்த கதாப்பாத்திரம் பெயர் சில்க் அதனால், அவர் சில்க் சுமிதாவாக தன் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டார்.
முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருந்தது. ஆனால் விணுச்சக்ரவர்த்தி பத்திரிகையில் பார்த்து சில்க் சுமிதாவை அறிமுகப்படுத்தினேன் என சொன்னாரே தவிர என் பெயரையோ, மாயா பத்திரிகையின் பெயரையோ சொல்லவில்லை.
சில்க் சுமிதாவால் நிறைய சம்பாதித்தேன்
பின், சில்க் சுமிதாவே எனக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். நான் அவருடன் காதலனாகவும், கணவனாகவும் பல படங்களில் நடித்துள்ளேன். எனக்கு அவர் அவ்வப்போது பணம் தருவார். நான் வேண்டாம் நடிக்க வாய்ப்பு தாருங்கள் எனக் கூறிவிடுவேன். அவர் மூலமாக நிறைய படங்களில் நடித்து சம்பாதித்தேன். என்னை எங்காவது பொது வெளியில் பார்த்தால், என் தோல் மீது கையைப் போட்டுக் கொண்டு சில்க் பேசும். அப்போது என்னோடு இருப்பவர்கள் எல்லாம் என்னை வியந்து பார்ப்பார்கள்.
ஆரம்பத்திலேயே அவர் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என நினைக்க வில்லை. படத்தில் நடித்தால் 200, 500 ரூபாய் கிடைக்கும் என தான் நினைத்தார். அவர் ஒரு வெள்ளந்தியான பெண். என்ன உடை கிடைத்தாலும் போட்டுக் கொள்வார். அவர் இவ்வளவு பெரிய இடத்திற்கு வருவார் என நினைக்கவில்லை. இவர் எந்த அடாலடி தனமும் இல்லாததால் தான் அனைத்து மொழி படத்திலும் அவர் நடித்தார்.
சில்க்கிற்காக காத்திருந்த பாலு மகேந்திரா
இவர் புகைப்படம் இருந்தாலே ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என்பதால், நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரது கால் ஷீட்டிற்காக காத்திருந்தனர். பாலு மகேந்திரா சில்க் சுமிதாவை வைத்து படம் எடுக்கவே மாட்டேன் எனக் கூறினார். ஆனால், அவரே கடைசியில் அவரை வைத்து படம் எடுக்க காத்திருந்தார்.
ட்ராக்கை மாற்றிய பாரதிராஜா
பாரதிராஜா, கவர்ச்சி கதாப்பாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பியா என சில்க்கிடம் கேட்டார். அதற்கு அப்படி எல்லாம் இல்லை சார். டைரக்டர் தான் அப்படி கேக்குறாங்க என சொன்னதும், அமைதியான குடும்பப் பெண்ணாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
அலைகள் ஓய்வதில்லை படத்தில், பெண்கள் மோகம் பிடித்த தியாகராஜனின் மனைவியாக நடித்திருப்பார். சில்க் சுமிதா எல்லா படத்திலும் பாவங்களை மிக அழகாக வெளிப்படுத்துவார். எப்போதும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் கதாப்பாத்திரத்தை உள்வாங்கி நடிப்பார்கள்,
தமிழ் சினிமாவில் சில்க் சுமிதா கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்டார். அவர் எப்படி பார்க்கப்பட்டாலும் வரலாற்றில் இடம் பிடித்தார் என்பது தான் உண்மை எனண அவர் அந்தப் பேட்டியில் கூறி இருப்பார்.
டாபிக்ஸ்