தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan Ranganathan: என் பொண்ணு பத்தி பேசுறீங்களா.. அதிரடியான முடிவு எடுத்த பயில்வான் ரங்கநாதன்

Bayilvan Ranganathan: என் பொண்ணு பத்தி பேசுறீங்களா.. அதிரடியான முடிவு எடுத்த பயில்வான் ரங்கநாதன்

Aarthi Balaji HT Tamil
Jun 10, 2024 09:46 AM IST

Bayilvan Ranganathan: பயில்வான் ரங்கநாதன் தனது இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தி வைத்து இருக்கிறார். மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

என் பொண்ணு பத்தி பேசுறீங்களா.. அதிரடியான முடிவு எடுத்த பயில்வான் ரங்கநாதன்
என் பொண்ணு பத்தி பேசுறீங்களா.. அதிரடியான முடிவு எடுத்த பயில்வான் ரங்கநாதன்

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாக்கு அழுகிவிடும் என்றும்; தன் மகளைப் பற்றி எவ்வாறு அப்படி பேசலாம் என்றும் பேசினார், பயில்வான் ரங்கநாதன். இது சமூக வலைதளங்களில் பற்றி எரிய, அதன் தொடர்ச்சியாக குமுதம் யூடியூப் சேனலில் அவரை அழைத்து பேட்டியெடுத்திருக்கிறார்கள்.

பார்ப்பவர்கள் மனநிலையைப் பொறுத்து

”நான் முறுக்கு மீசை வைத்திருப்பது என்பது ஆண்மையின் அடையாளம். நான் நடிகைகள் பற்றி பேசுவது என்பதற்கு நேரில் பார்க்கவேண்டும் என்ற அர்த்தம் அல்ல. ஒரு பத்திரிகையாளர் செய்தியைச் சொல்வான். அதைப் படிப்பவர்கள் மற்றும் பேட்டியைப் பார்ப்பவர்கள் மூலம் மனநிலையைப் பொறுத்து அது மாறுபடும். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கல்யாணம் நடக்கக் காரணம் செய்தியாளர்கள் எழுதியது தான், பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினியே சொல்லியிருக்கிறார்.

நான் அவர்கள் தனியாக இருக்க விரும்புவதைத் தான் சொல்லியிருக்கிறேன். ஆதாரமில்லாமல் எந்தவொரு அவதூறும் நான் இதுவரை சொன்னதில்லை. அமலா பால் ஏன் விவாகரத்து செய்துகொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். 

நான் பத்திரிகையில் வந்ததைத் தான் சொன்னேன். நான் பிழைப்புக்காக தான் இப்படி பேசுகிறேன். என்னுடையது பேச்சு வியாபாரம். நடிகைகள் செய்வது கவர்ச்சி வியாபாரம். நான் ராதிகாவை பார்த்தோ, குயிலியைப் பார்த்தோ, ஷகிலாவைப் பார்த்தோ, ரேகா நாயரை பார்த்தோ பயப்படவில்லை.

எடிட் பண்ணிட்டாங்க

நான் பேசினது எல்லாம் எடிட் பண்ணிட்டாங்க. குயிலி, தன்னுடைய முதல் படத்தில்,அவரைப் பற்றி தவறாக எழுதினேன் என்று எப்போதும் கடுப்பாகவே இருப்பார். ‘நிலா அது வானத்து மேலே’ பாடலில் குயிலி நடித்ததற்குப் பின், அவரை கவர்ச்சி நடிகை என்று சொன்னேன். அதனால், அவர் என்னை தவறாகப் புரிந்துகொண்டார். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட எந்தவொரு பிரச்னையும் இல்லை.

நடிகைகளை அது, இது என்று பேசுவது அவர்கள் நடத்திய விதத்தின் வெளிப்பாடு தான். கலைஞர் தொலைக்காட்சியில் நடந்தது எல்லாம் செட்டப் நாடகம்.

ஒரு வளர்ப்புப் பெண்ணை வளர்த்துட்டு போலீஸ் வரை போவது எல்லாம் ஷகிலாவின் நன்னடத்தைக்குச் சான்றா?. என்னை அவமானப்படுத்துவதற்காக, என் மகளைப் பற்றி தவறாக சொன்னார்கள். பொய்ப் பேசினால் கோபம் வரும்’’ என்றார்.

மகளுக்கு நடந்த எளிமையான நிச்சயதார்த்தம்

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் பயில்வான் ரங்கநாதன் அதை பொய் என எப்படியாவது நிருப்பித்து காட்ட வேண்டும் என நினைத்து இருந்தார். 

அதன் படி, தனது இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தி வைத்து இருக்கிறார். மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் மகளின் நிச்சயதார்த்தம் ஆன புகைப்படத்தை பயில்வான் ரங்கநாதன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருப்பதாக தெரிகிறது. தன் மகள் பற்றி ஷகிலா அவதூறாக பேசியதால் தான் அவர் உடனே திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்து இருக்கிறார் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

நன்றி: கலைஞர் தொலைக்காட்சி, குமுதம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்