Bayilvan About Vijay: ‘பேசுறது 1 நிமிஷம்.. பேப்பர் பாக்குறது 5 முறையா?’ பரந்தூர் சென்ற விஜய்யை வச்சு செய்த பயில்வான்..
Bayilvan About Vijay: பரந்தூர் விமான நிலைய விவாகரம் தொடர்பாக மக்களை சந்தித்த விஜய்யை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்துள்ளார்.

Bayilvan About Vijay: சென்னை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு எதிரப்பு தெரிவித்து சுமார் 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த சமயத்தில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் பரந்தூர் மக்களை சந்தித்து பேச உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு அங்கு சென்றார்.
பரந்தூரில் உணர்ச்சி வசப்பட்ட விஜய்
அப்போது, விவசாய நிலங்களை அழித்து விட்டு புதிய விமான நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், அங்குள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார். மக்களிடையே உணர்ச்சிகரமாக பேசிய அவர், பலமுறை கையில் வைத்திருந்த பேப்பரை பார்த்து படித்தது விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும், அவர் வாகனத்தில் இருந்தே மக்களிடம் பேசியதும், செய்தியாளர்களை சந்திக்காமல் விரைந்து கிளம்பியதும் பல விமர்சனங்களை உண்டாக்கியது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய்யின் பரந்தூர் பயணம் எப்படி இருந்தது என்பது குறித்து சினி கழுகு எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
1 நிமிஷம் பேச 5 முற பேப்பர்
விஜய்யின் பரந்தூர் நாடகம் சூப்பர் ஹிட். பேசுறது 1 நிமிஷம். இதுல 5 முறை பேப்பர பாக்குறாரு. இவெர்லலாம் எப்படி தேர்தலுக்கு பிரச்சாரம் பண்ண போறாரு. சினிமாவுல டப்பிங் பேசுற மாதிரின்னு நெனச்சிட்டு இருக்காரு போல. அவரெல்லாம் இன்னும் பேசவே தயாரா இல்ல. அவ்ளோ பெரிய கூட்டத்த கூட்டிட்டு 5 நிமிஷம் கூட பேசல.
இவரு மீட்டிங்காக பெருசா செலவு பண்ணவே இல்ல. அவரோட பிரச்சார வேன்லயே போய் எம்ஜிஆர் ஸ்டைல்ல கைய ஆட்டிட்டு வந்துட்டாரு. ஆனாலும் விஜய் ரசிகர்கள பாராட்டி ஆகணும். அவங்க எந்த வித பிரச்சனையும் பண்ணாம, சட்டம் ஒழுங்கு சீர் கெடாம தான் நடந்துகிட்டாங்க.
விஜய் பேதுறது மக்களுக்கு புரியல
எம்ஜிஆர் எல்லாம் தன்னோட ரசிகர்களுக்கு முன்னாடி எதுவும் முக்கியம் இல்லன்னு இருந்தாரு. ஆனா விஜய் பனையூர்ல மீட்டிங்கு போகாம கீர்த்தி சுரேஷோட தல பொங்கல கொண்டாடிட்டு இருக்காரு. எம்ஜிஆர் தன்னோட மீட்டிங்ல பேச ரத்தத்தின் ரத்தமே என்ற வார்த்தைய யூஸ் பண்றது மாதிரி விஜய்யும் ஏதாவது ஒன்ன வச்சிக்கனும். அவரு பேசி முடிச்சிட்டாரா இல்லையான்னே தெரியாம எல்லாம் முழிக்குறாங்க.
அவரு ரொம்ப எளிமையா தெளிவா பேச கத்துக்கனும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைய கிளப்பாம பேசிட்டு இருக்காரு. ஏதாவது பேசுனா உள்ள வச்சிட்டாங்கனா எப்படி. இத்தனை நாளா சொகுசா வாழ்ந்த மனுஷன் ஜெயில் போக ஏத்துப்பாறா?
விஜய் முதிர்ந்த அரசியல்வாதி அல்ல
இவரு விக்கிரவாண்டில மாநாடு போட விவசாய நிலத்தையும், கிணறையும் அழிச்சிட்டாரு. அதெல்லாம் தப்பா தெரியல. இப்போ இன்னொரு விவசாய நிலத்த காப்பாத்த போறதெல்லாம் நியாயமா? விஜய் இன்னும் முதிர்ந்த அரசியல்வாதியா ஆகல. ஆனந்த் மாதிரியான ஆட்கள் எல்லாம் கொஞ்சம் அவர் கூட நிறைய வேணும்.
3 வருஷமா போராடிட்டு இருக்குறது கண்ணுக்கு தெரியல. இப்போ அரசியல் கட்சி தொடங்குனதுக்கு அப்புறம் மட்டும் கண்ணு தெரியுதா? இவரு இங்க போறதுக்கு முக்கிய காரணமே ஏன் இங்கயே சும்மா இருக்கீங்க, கல்யாணத்துக்கு போறீங்க, தல பொங்கலுக்கு போறீங்கன்னு பேச்சு வந்தத சமாளிக்க தான்.
விஜய்க்கு அட்வைஸ்
இப்போ, தன் மேல இவ்ளோ கவன ஈர்ப்பு இருக்குறத தெரிஞ்சிகிட்டு நாடகம் போட்டுட்டு இருக்காரு. விஜய் தமிழ்நாட்டில் நடக்குற எல்லா விஷயத்துலயும் ரொம்ப பொருமையா தான் அறிக்கை விடுறது, சம்பவ இடத்துக்கு போறதுன்னு இருக்காரு. அப்படியே வீட்டை விட்டு வெளியே வந்தா கூட பத்திரிகையாளர்கள சந்திக்க மாட்டீங்குறாரு. வண்டில கை காட்டிட்டே வந்துட்டு அப்படியே போயிடுறாரு. அதையெல்லாம் பாத்து தான் என்னை மாதிரியான பத்திரிகையாளர்கள் எல்லாம் அவர் இனிமே என்ன பண்ணனும்ன்னு அட்வைஸ் பண்றோம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்