‘எச்சில் இலை என தெரிந்தே சாப்பிடுகிறார் நயன்தாரா! கொடுமையை அனுபவிக்கும் விக்கி..’ பயில்வான் டாக்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘எச்சில் இலை என தெரிந்தே சாப்பிடுகிறார் நயன்தாரா! கொடுமையை அனுபவிக்கும் விக்கி..’ பயில்வான் டாக்ஸ்

‘எச்சில் இலை என தெரிந்தே சாப்பிடுகிறார் நயன்தாரா! கொடுமையை அனுபவிக்கும் விக்கி..’ பயில்வான் டாக்ஸ்

Malavica Natarajan HT Tamil
Dec 23, 2024 10:58 AM IST

நடிகை நயன்தாரா பிரபுதேவாவை கல்யாணம் செய்ய நினைத்தது குறித்தும் தற்போது விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்டது குறித்தும் நடிகர் பயில்வான் கருத்து தெரிவித்து பேசியுள்ளார்.

‘எச்சில் இலை என தெரிந்தே சாப்பிடுகிறார் நயன்தாரா! கொடுமையை அனுபவிக்கும் விக்கி..’ பயில்வான் டாக்ஸ்
‘எச்சில் இலை என தெரிந்தே சாப்பிடுகிறார் நயன்தாரா! கொடுமையை அனுபவிக்கும் விக்கி..’ பயில்வான் டாக்ஸ்

நயன்தாராவை விமர்சிக்கும் பயில்வான்

அவர் அளித்த பேட்டியில், பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்ய முயன்றது முதல், தற்போது விக்னேஷ் சிவனை திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம் என்பது வரை பேசி இருக்கிறார். இது தான் தற்போது கோலிவுட் வட்டாரம் முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது.

இந்நிலையில், நயன்தாராவின் இந்த பேச்சு குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பவர் மீடியா எனும் யூடியூப் சேனலில் பேசி தன் கருத்துகளை தெரிவித்திருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

கான்ட்ரோவெர்ஸி பேசும் நயன்தாரா

அந்தப் பேட்டியில், " நடிகை நயன்தாரா தற்போது பத்திரிகையாளர்களை விட அதிகமாக கான்ட்ரோவெர்ஸி பேசி வருகிறார். முன்ன எல்லாம் பேசவே மாட்டாரு. ஆனா இப்போ பேசுனா நிறுத்தவே மாட்டிங்குறாரு. நடிகர்கள்ல சிவக்குமார் மாதிரி இப்போ நடிகைகள்ல நயன்தாரா வந்துருக்காங்க. இவங்க என்னமோ 50 வருஷத்துக்கு முன்னாடி சினிமாவுல நடிக்க வந்த மாதிரி, நான் சினிமாவுல நடிக்க வந்த சமயத்துல நிறைய நடிகைகள் 2ம் திருமணம் செய்துகொண்டு போனாங்க. அதுமட்டுமல்லாம 2ம் திருமணம் அங்கிகரிக்கப்பட்டதாகவே இருந்தது. பலருடைய வாழ்க்கையில் 2ம் திருமணம் வெற்றிகரமாக இருந்துள்ளது.

எச்சில் இலைன்னு தெரிந்தே சாப்பிடுவதா?

அதை எல்லாம் பார்த்து தான் 2ம் திருமணம் செய்யும் நினைப்பு எனக்கும் வந்தது என கல்யாணம் ஆகி குழந்தைகளுடன் இருக்கும் பிரபுதேவாவை காதலித்தது குறித்து நயன்தாரா பேசியுள்ளார். மேலும் ஏற்கனவே திருமணமானவரை நான் திருமணம் செய்தால் என்ன தவறு என்றும் கேட்டுள்ளார்.

யாரவது எச்சில் இலையில சாப்பிடுவாங்களா? இந்த காலத்துல கணவன் சாப்பிட்ட தட்டுல கூட யாரும் சாப்பிடுறது இல்ல. எச்சில் இலையில் சாப்பிடுவது மனைவிக்கே உரித்தான உரிமை. ஏற்கனவே கல்யாணம் ஆகி உரிமையோட இருக்கவங்களுக்கு சக்காளத்தியா போகணும்ன்னா சரியா வருமா?

கொடுமைய அனுபவிக்கும் விக்னேஷ் சிவன்

நீ நடிகை தானா? புதுசா ஒருத்தர பாத்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான. சரி இப்போ தான் விக்னேஷ் சிவன கல்யாணம் பண்ணியாச்சு. அப்போவாவது சரியா இருக்கலாம் இல்ல. திரும்ப வந்து விக்னேஷ் சிவன கல்யாணம் பண்ணிட்டு குற்ற உணர்ச்சியில இருக்கேன்னு சொல்லிட்டு இருக்க.

நான் தான் விக்னேஷ் சிவன் கிட்ட போய் காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன். ஆனா அதுவே இப்ப தப்பாகிடுச்சி. என்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா விக்னேஷ் சிவன் பெயர் நன்றாக இருந்திருக்கும்ன்னு சொன்னா, அப்போ விக்னேஷ் சிவன் இத்தனை நாளா கொடுமையத்தான் அனுபவிக்கிறாரா?

வீட்டுக்கு வீடு வாசப்படி தான். நாங்க நடிகைக்கு பின்னாடி ஓடுறவங்கள கூஜான்னு எழுதுவோம். ஒருவேளை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கூஜாவாகத்தான் இருக்காரோ என்னவோ. இவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்கன்னு அவங்களே சொன்னா தான தெரியும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.