Director Mysskin: 'மிஷ்கின் வில்லங்கமான ஆளு.. அம்மண பட டைரக்டர்ன்னு பேர்.. ' வெளுத்துவிட்ட பயில்வான்
Director Mysskin: இயக்குநர் மிஷ்கின் மிகவும் வில்லங்கமான நபர். அவர் தண்ணி அடிச்சா நாகரீக மரபை மீறி பேசுவார் என நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Director Mysskin: கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவின் பேசுபொருளாக மாறி இருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவர், படவிழாவில் பேசிய அநாகரீக வார்த்தைகள் தான் இத்தனைக்கும் காரணம். அத்துடன் அவர், இசையமைப்பாளர் இளையராஜாவை அநாகரீகமாக பேசியதும் காரணம்.
சிலர், மிஷ்கின் பேச்சுக்கும், சிலர் மிஷ்கினின் இளையராஜா பற்றிய பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் யூடியூப் சேனலில் மிஷ்கினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வில்லங்கமான ஆளு
அந்த வீடியோவில், "மிஷ்கின் ஒரு வில்லங்கமான ஆளு. அவரு தண்ணி போடுவேன், சாரயம் காய்ச்சத் தெரியும்ன்னு எல்லாம் சொல்லுவாரு. மேடை நாகரீக மரபை மீறி பேசி வருவார்.
இளையராஜா இல்லையென்றால் எனக்கு வாழ்க்கை இல்லை என்று சொன்ன நாக்கு தான் இப்போ அவன், இவன், இளையராஜாவால தான் எல்லாரும் குடிகாரங்களா ஆகுறாங்கன்னு பேசியது. அன்னைக்கு போதையில உச்சமா இருந்தாரா என்னென்னு தெரியல ரொம்ப பேசிட்டாரு.
அவர தடுத்திருக்கலாம்
அவரோட பேச்சுக்கு மேடைல இருக்கவங்க எதிர்ப்பு தெரிவித்தோ இல்ல தடுத்திருந்தாலோ அவரு கொஞ்சம் நிதானத்திர்கு வந்திருப்பாரு. ஆனா, அவங்க எல்லாம் சிரிச்சு, கை தட்டினதால ரொம்ப பேசிட்டாரு. அவங்க எல்லாம் லூசுப்பயன் பேசட்டும்ன்னு விட்டதால அவருக்கு ரொம் அசிங்கமா போச்சு.
இந்த சமயத்துல அவருக்கு பல இடத்துல இருந்து எதிர்ப்பு வந்ததால, மிஷ்கின் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இது ஆரோக்யமா பட்டாலும், இனிமேல் அவரு மேடை நாகரீகம் கருதி பேசனும்.
அதுவும் இல்லாம, படத்துல நடிகைங்கள கட்டிபிடிங்க, முத்தம் கொடுங்க, ஏன் லிப் லாக் கூட பண்ணுங்க. ஆனா பொது நிகழ்ச்சியில மேடை நாகரீகம் கருதி நடந்துகோங்க.
அம்மண டைரக்டர்
இவரு ஆண்ட்ரியாவ வச்சு பிசாசு 2 படத்த எடுத்தாரு. அந்தப் படத்துல ஆண்ட்ரியாவ நியூட்டா வச்சு போட்டோ ஷூட் எல்லாம் எடுத்தாங்க. ஆனா அத படத்துல யூஸ் பண்ணல. அதுக்கான காரணத்தையும் மிஸ்கினே சொல்லி இருப்பாரு. இந்த போட்டோவ வச்சு படம் ரிலீஸ் பண்ணா நல்லா வருமானம் வரும். படமும் ஓடும். ஆனா என்ன அம்மண பட டைரக்டர்ன்னு சொல்லிடுவாங்க. அதுனால நான் இன்னும் அந்தப் படத்த கூட பாக்கலன்னு சொல்லிருப்பாரு.
மிஷ்கினின் நட்பு வட்டம் அதிகம்
தவறு செய்வது மனித இயல்பு தான். மிஷ்கின் தவறு செஞ்சி இப்போ திருந்திட்டாரு. மிஷ்கின் ஆண்கள் கிட்ட ஒரு மாதிரியும், பெண்கள் கிட்ட ஒரு மாதிரியும் பேசுவாருன்னு எல்லாம் சொல்றாங்க. மிஷ்கின்க்கு பல பெண்களுடன் அறிமுகமும் நட்பும் இருக்கு. அதுனால தான் அவரு அவங்கள எல்லாம் கிண்டல் பண்ணி பேசுவாரு. அதனால, சம்பந்தபட்டவங்க தான் எந்த கேள்வியா இருந்தாலும் எழுப்ப முடியும் என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்