புரொடக்சன் ஹவுஸில் தூங்கும் சீனு ராமசாமி.. விவாகரத்து பின்புலம்.. நடிகை சர்ச்சை.. பயில்வான் ரங்கநாதன் கருத்து
புரொடக்சன் ஹவுஸில் தூங்கும் சீனு ராமசாமி.. விவாகரத்து பின்புலம்.. நடிகை சர்ச்சை.. பயில்வான் ரங்கநாதன் கருத்து கூறியுள்ளார்.
![புரொடக்சன் ஹவுஸில் தூங்கும் சீனு ராமசாமி.. விவாகரத்து பின்புலம்.. நடிகை சர்ச்சை.. பயில்வான் ரங்கநாதன் கருத்து புரொடக்சன் ஹவுஸில் தூங்கும் சீனு ராமசாமி.. விவாகரத்து பின்புலம்.. நடிகை சர்ச்சை.. பயில்வான் ரங்கநாதன் கருத்து](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/14/550x309/agagagagaga_1734144700173_1734144717304.png)
புரொடக்சன் ஹவுஸில் தூங்கும் சீனு ராமசாமி.. விவாகரத்து பின்புலம்.. நடிகை சர்ச்சை.. பயில்வான் ரங்கநாதன் கருத்து
இயக்குநர் சீனு ராமசாமியின் விவாகரத்து பின்னணி பற்றி மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’சீனு ராமசாமி மதுரையில் பிறந்தார். மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் கல்லூரியில் பட்டம்பெற்றார். ஆரம்பகாலத்தில் இவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அதன்பின் சினிமா மோகம் காரணமாக, ஒளிப்பதிவாளர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். இவர் இயற்கையிலேயே எழுதும் வல்லமைப் படைத்தவர். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெரும்பாலும் இவரது புத்தகங்கள் மதுரையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களே. மதுரையை அதன் வரலாற்றுப் பின்னணியோடு எழுதும் ஆற்றல் படைத்தவர், சீனு ராமசாமி.
விஜய்சேதுபதியை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி:
அடிப்படையில் இவர் ஒரு எழுத்தாளர். தனது எழுத்துக்களை கேமரா மூலமாக வெளியே கொண்டு வந்தார். இவர் எழுதி இயக்கிய முதல் படம், ‘கூடல் நகர்’. மதுரைக்கு இன்னொரு பெயர் கூடல் மாநகரம். தான் பிறந்த ஊருக்குப் பெருமைசேர்க்கும் வகையில் கூடல் நகர் படத்தை எடுத்தார். அதன் பிறகு, தென்மேற்குப் பருவக்காற்று என்ற மண் சார்ந்த வாழ்வியல் படத்தை எடுத்தார். இந்தப்படத்தில் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மக்கள் செல்வன் என்ற பட்டத்தை, விஜய் சேதுபதிக்கு வழங்கியவரே சீனு ராமசாமி தான். மூன்று தேசிய விருதுகளை வென்றது தென்மேற்குப் பருவக்காற்று.
தென்மேற்கு பருவக்காற்றில் நடித்த சரண்யா பொன்வண்ணன் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். அடுத்து கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்னும் பாடலை எழுதியமைக்காக, சிறந்த கவிஞர் என்ற விருதைப் பெற்றார், கவிஞர் வைரமுத்து. அதன்பின் சிறந்த மாநிலப்படம் என பரிசை வென்றது, தென்மேற்குப் பருவக்காற்று. மூன்று பரிசுகளுமே மத்திய அரசின் விருதுகள் தான்.
அதன்பின், இவர் பல படங்களை இயக்கினாலும், இவரது தர்மதுரை வசூலில் சாதனைப் படைத்தது. இந்தப் படத்திலும் விஜய்சேதுபதி தான் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்து இருந்தார். சமீபத்தில் இவர் எழுதி இயக்கிய படம், கோழிப்பண்ணை செல்லத்துரை. ஒரு இளைஞரின் வாழ்வியல், கோழிப்பண்ணை செல்லத்துரை. இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டைப்பெற்றது. நான் கூட, சிறந்த விமர்சனத்தைக் கொடுத்து இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக சிறந்த படங்களை சிலநேரம் மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், ஓடிடியில் இப்படம் நிறையபேரால் பார்க்கப்பட்டு, பெரிய பாராட்டைப் பெற்றது.
தர்ஷனாவுடன் விவாகரத்துகோரிய சீனுராமசாமி:
இவர் தர்ஷனா என்பவரை திருமணம் செய்து, 17 வருடம் இல்லற வாழ்வில் இருந்தார். ஆனால், எந்தவொரு கிசுகிசுவும் வராமலேயே இந்த ஒரு விவாகரத்து அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார், சீனு ராமசாமி.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தர்ஷனாவும், இவரும் விவாகரத்து மனுவைப் போட்டுள்ளனர். மாமனிதன் என்ற படத்தை தயாரித்தார், இளையராஜா. இந்தப்படத்தில் தான் இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து இருக்கின்றனர். இந்தப்படத்தின் இசைகோர்ப்புப் பணிகளின்போது ஏற்பட்ட முரண்பாட்டில், சீனு ராமசாமி செட்டுக்கு வரக்கூடாது என சொல்லிவிட்டார், இளையராஜா.
ஆனால், ஒரு வார்த்தைகூட கூறாமல் ஜென்டில்மேனாக படத்தை முடித்துக்கொடுத்தார், சீனு ராமசாமி. சீனு ராமசாமி அடிக்கடி புரொடக்சன் ஹவுஸிலேயே தங்கிவிடுவார் எனவும், வீட்டுக்குச் செல்லமாட்டார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
நடிகை சர்ச்சை:
2013ஆம் ஆண்டு, இடம் பொருள் ஏவல் என்னும் படத்தை இயக்கிக்கொண்டிருந்தார், சீனு ராமசாமி. அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவை பாலியல் சீண்டல் செய்திருக்கிறார், சீனு ராமசாமி என அந்த நடிகை புகார் அளித்திருக்கிறார். ஆனால், மனிஷா யாதவ் அதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை.
மற்றபடி, கிசுகிசுக்கள் எதுவும் வந்தது இல்லை. ஆனால், திடீரென்று விவாகரத்து பற்றி பேசியிருக்கிறார் என்றால், அவருக்கும் தொழில் பிரச்னைகள் இருக்கும் பாடி டிமாண்ட் இருக்கும் என்பதை ஹவுஸ் வொய்ஃப் புரிந்துகொள்வதில்லை. இயக்குநர் தாமதமாக வீடு சென்றபோது, மனைவியுடம் அன்பு செலுத்தமுடியாமல் போயிருக்கும். வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு இயக்குநர் போவது இருக்கும் நிலையில் அதை மனைவிமார்கள் புரிந்துகொண்டால் எந்தப்பிரச்னையும் இல்லாது இருக்கும்'' என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்!
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்