அப்பாவையே தூக்கி சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. எதில் தெரியுமா?.. கிண்டலடிக்கும் பயில்வான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அப்பாவையே தூக்கி சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. எதில் தெரியுமா?.. கிண்டலடிக்கும் பயில்வான்

அப்பாவையே தூக்கி சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. எதில் தெரியுமா?.. கிண்டலடிக்கும் பயில்வான்

Malavica Natarajan HT Tamil
Dec 21, 2024 12:26 PM IST

கமல் ஹாசன் தன் மனைவிகளை வரிசையாக விவாகரத்து செய்தது போல், ஸ்ருதி ஹாசன் தன் காதலர்களை பிரேக் அப் செய்கிறார் என பயில்வான் ரங்கநாதன் கிண்டலடித்துள்ளார்.

அப்பாவையே தூக்கி சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. எதில் தெரியுமா?.. கிண்டலடிக்கும் பயில்வான்
அப்பாவையே தூக்கி சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. எதில் தெரியுமா?.. கிண்டலடிக்கும் பயில்வான்

இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இசையில் ஆர்வம் உள்ள ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் டூடுல் இசைக் கலைஞரை காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்ததாக செய்திகளும் புகைப்படங்களும் வெளியான நிலையில், அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்துவிச்சதாக செய்திகள் பரவத் தொடங்கியது.

அப்பாவை மிஞ்சிய மகள்

இதுகுறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கிங் 24x7 சேனலில் பேட்டி அளித்துள்ளார். அதில், "ஸ்ருதி ஹாசன் அவருடைய காதலரை ப்ரேக் அப் செய்துள்ளார், அவர் காதலரை பிரேக் அப் செய்வதில் அவரது அப்பாவையே மிஞ்சிவிட்டார். அவருடைய அப்பா கமல் ஹாசன் தான் அவரது மனைவிகளை ஒவ்வொருவராக விவாகரத்து செய்தார். அவருக்கு காதல் மன்னன் என்ற பெயகும் உண்டு. பல மனைவிகளை விவாகரத்து செய்தவர் என்ற பெயரும் உண்டு. அப்பாவிற்கு மகள் தப்பாமல் இருக்காரு.

ஸ்ருதி ஹாசன் பிரேக் அப்

சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் காதலித்தவர் பெயர் சாந்தனு ஹசாரிகா. அவர் ஒரு இசைக் கலைஞர். இவர்கள் இருவரும் ஒன்றரை வருடங்களாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தனர். திடீரென அவருடனான வாழ்க்கை கசந்துவிட்டாதா அல்லது சலிப்பு தட்டிவிட்டதா எனத் தெரியவில்லை.

சாந்தனுவை பிரேக் அப் செய்து இருவரும் அவர் அவர் வாழ்க்கையை பார்த்துவிட்டு பிரிந்து சென்று விட்டனர். அதை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளார்.

கால்ஷீட் கொடுத்த ரேவதி

தூண்டில், தொட்டான் சினுங்கி உள்பட 4 படங்களை எழுதி இயக்கியவர் இயக்குநர் கே.எஸ். அதியமான். இவர் நடிகை ரேவதியிடம் சென்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை ஒன்றைக் கூறி இருக்கிறார். அவரும் அந்தக் கதை பிடித்து போய் படத்திற்கு தேவையான கால்ஷீட்டையும் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து, இந்தப் படத்தின் கதாநாயகன் யார் என்பது குறித்து தயாரிப்பாளர் இயக்குநர் அதியமானிடம் கேட்டுள்ளார். அப்போது, நம் பட்ஜெட்டிற்கு ஒத்துப் போகிற வகையில் இருப்பவரை கதாநாயகனாக்கலாம் என்று முடிவு செய்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜை ரேவதிக்கு கதாநாயகனாக போடலாம் என இயக்குநர் அதியமான சிபாரிசு செய்துள்ளாராம்.

மாதம்பட்டி வாயல் வந்த வினை

ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தன் வாயைக் கொடுத்து சிக்கியுள்ளார். இவர், இயக்குநரிடம் சென்று, இந்தத் தயாரிப்பாளர் வேன்டாம். எனக்குத் தெரிந்த வேறு சில தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து இந்தப் படத்தை எடுக்கலாம் எனக் கூறி உள்ளாராம்.

இதை இயக்குநர் அப்படியே போய் தயாரிப்பாளரிடம் சொல்ல, அவர் என்ன தயாரிப்பாளரை மாற்றுவது நான் நடிகரையே மாற்றுகிறேன் எனக் கூறி மாதம்பட்டி ரங்கராஜை படத்தில் இருந்து நீக்கி உள்ளனராம்" எனக் கூறினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.