டைவர்ஸ் வேணும்ன்னு நினைக்குற பொண்ணுங்க இந்தப் படத்த பாருங்க.. அட்வைஸ் செய்த பயில்வான்.. அப்படி என்ன படம் அது?
கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என நினைக்கும் பெண்கள் எல்லாம் ஒருமுறை இந்தப் படத்தை மட்டும் பார்க்க வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் அறிவுரை வழங்கி உள்ளார்.
சமீப காலங்களில் திருமண பந்தத்தில் இணைவதில் உள்ள வேகத்தைக் காட்டிலும் அந்த பந்தத்தில் இருந்து பிரிவதற்கு பெரும்பாலான மக்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை.
இதனை சிலர் நாகரிகமாகவும், கலாச்சார வளர்ச்சியாகவும் நினைத்து பெருமையான விஷயமாகவே கருதுகின்றனர்.
விவாகரத்து கலாச்சாரம்
இந்த எண்ண ஓட்டம் திரைத்துறையினராலே வெகுவாக மக்கள் மத்தியில் கடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருந்தாலும் அதே திரைத்துறையில் பல ஆண்டுகளாக திருமண உறவை மதித்து நடக்கும் ஜோடிகளும் உள்ளனர். திருமண உறவுகளை கொண்டாடும் படங்களும் வெளிவந்த வண்ணமும் இருக்கின்றன.
பயில்வான் கூறிய படம்
இந்நிலையில், கிங் 24X7 சேனலுக்கு பேட்டி அளித்த நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், விவாகரத்து செய்ய நினைப்போர் பாக்கியராஜின் மௌன கீதங்கள் படத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அப்படி என்ன இருக்கிறது இந்தப் படத்தில் என அலசி ஆராய்ந்து பார்த்தால், மௌன கீதங்கள் படத்தை 1981ம் ஆண்டு இயக்கி நடித்து வெளியிட்டுள்ளார் பாக்கியராஜ்.
குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காமெடி படமான இதில் பாக்கியராஜிற்கு ஜோடியாக சரிதா நடித்துள்ளார்.
பாக்கியராஜை ஏமாற்றும் சரிதா
இந்தப் படத்தில் பாக்யராஜூம் சரிதாவும் ஒரே கம்பெனியில் இன்டர்வியூவிற்கு வருகின்றனர். அப்போது, பாக்யராஜ் தன்னைவிட அதிக தகுதியுடன் இருப்பதை அறிந்த சரிதா, தன்னை அந்த கம்பெனியின் மேனேஜர் போல் காட்டிக் கொண்டு, ஏற்கனவே ஆட்களை தேர்ந்தடுத்து விட்டதாக நடிக்கிறாள்.
இதை நம்பிய பாக்கியராஜூம் அங்கிருந்து கிளம்புகிறார். பின்னாளில், சரிதா தன்னை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு செய்ததை அறிந்து, கோபம் கொள்கிறான். மேலும், தனக்கு தகுதியான வேலை வாங்கித் தரவேண்டும் எனவும் சரிதாவை நச்சரிக்கிறார்.
காதலித்து திருமணம்
வேறு வழி இல்லாமல், சரிதா தன்னுடைய ஆபிஸில் காலியாக உள்ள பணிக்கு பாக்கியராஜை சிபாரிசு செய்ய அவருக்கும் வேலை கிடைக்கிறது. பின் இருவரும் காதிலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
திருமணமான புதிதிலே தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும் எனக் கூறி பாக்கியராஜிடம் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். பின் தனது வேலையை ராஜினாமா செய்து குடும்ப வாழ்க்கையை கவனித்துக் கொள்கிறாள். இப்படியே இவர்களின் வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருக்கும் சமயத்தில், கணவரை இழந்த சரிதாவின் தோழிக்கு உதவ பாக்கியராஜ் நிர்பந்திக்கப்படுகிறான்.
மனைவியின் தோழியுடன் உறவு
அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் உடலுறவு கொண்டனர். இதை எண்ணி வருந்திய பாக்கியராஜ், நடந்ததை சரிதாவிடம் சொல்ல தைரியம் இல்லாமல் குடித்துவிட்டு வந்து கூறுகிறான்.
தன் பக்கம் உள்ள நியாயத்தை எவ்வளவோ எடுத்துக் கூற முயன்றும் சரிதா அதை காது கொடுத்து கேட்காமல், வீட்டை விட்டு வெளியேறினாள். பின் தன் அப்பாவிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறியும் அவர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. காரணம் வாழ்ந்தால் புருஷனோடு வாழ வேண்டும். இல்லையெனில் தனியாக குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறியதால், தனியாகவே வசித்து வருகிறார்.
தனிமையில் தவிப்பு
அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து தனி ஆளாகவே தன் குழந்தையை பாதுகாத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், புதிய வேலை தேடி சென்னை வரும் சரிதாவை பாக்கியராஜ் பார்க்கிறார். பின், தன் கம்பெனியிலேயே அவர் வேலை வாங்கித் தருகிறார். இது எதையும் அறியாத சரிதா எப்போதும் பாக்கியராஜை விமர்சித்து வருகிறார்.
காப்பாற்றும் கணவர்
இதற்கிடையில், சரிதாவின் மகனை கடத்தி வைத்துக் கொண்டு ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்துள்ளான். இதை உண்மை என நம்பி சென்ற சரிதாவின் கேரக்டரை அனைவரும் அசிங்கப்படுத்திய நிலையில் பாக்கியராஜ் மட்டும் தான் சரிதாவிற்கு ஆதரவாக இருப்பார்.
முன்னதாக, சரிதாவைப் பார்த்த பாக்கியராஜ் இன்னும் 30 நாட்களுக்குள் மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழாவிட்டால் வேறு திருமணம் செய்து கொள்வதாகவும் சவால் விடுத்திருப்பார். இதை அனைத்தையும் நினைத்து வருந்திய சரிதா மீண்டும் பாக்கியராஜுடன் சேரந்து வாழ்வார்.
இந்த படத்தை பார்த்த பின், யாருக்கும் விவாகர்தது செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராது எனவும் அறிவுறுத்தி இருப்பார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்