சிவாஜி வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு.. பழைய குப்பையை கிளற வேண்டாம்! பிக் பாஸ் சிவக்குமார் விஷயத்தில் பயில்வான் பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிவாஜி வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு.. பழைய குப்பையை கிளற வேண்டாம்! பிக் பாஸ் சிவக்குமார் விஷயத்தில் பயில்வான் பேச்சு

சிவாஜி வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு.. பழைய குப்பையை கிளற வேண்டாம்! பிக் பாஸ் சிவக்குமார் விஷயத்தில் பயில்வான் பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 25, 2024 02:10 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்த சிவக்குமார் தன்னை சிவாஜி கணேசன் பேரன் என்று கூறிய விஷயம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மென்றும் விழுங்கியும் பேசியுள்ளார்.

சிவாஜி வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு.. பழைய குப்பையை கிளற வேண்டாம்! பிக் பாஸ் சிவக்குமார் விஷயத்தில் பயில்வான் பேச்சு
சிவாஜி வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு.. பழைய குப்பையை கிளற வேண்டாம்! பிக் பாஸ் சிவக்குமார் விஷயத்தில் பயில்வான் பேச்சு

இதையடுத்து சிவக்குமார் யார், அவரது மறுபக்கம் என்ன என்பது குறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அடடா தமிழ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதில், ராம்குமார், சிவாஜி கணேசன் ஆகியோர் சிவக்குமாரை ஏற்றுக்கொள்ளததும், சிவாஜி வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு பற்றியும் பேசியுள்ளது. பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

"கூட்டி கழித்து பார்க்கையில் பிக் பாஸ் சிவகுமார் சிவாஜி கணேசனின் பேரன் தான். லீகல், இல்லீகல் என இருக்கிறது. இதில் சிவாஜி கணேசன், ராம்குமார் ஆகியோர் இல்லீகல் என்று சொன்னார்கள்

ராம்குமார் - வைஜேந்திக்கு பிறந்தவர்

சிவாஜி கணேசன் பேரன் என்று சொல்லப்படும் சிவக்குமார் சிங்கக்குட்டி என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் பல்வேறு வகைகளில் பின்னணியாக இருந்தவர் ஸ்ரீபிரியா. அவரது அக்காவான வைஜேந்தியைுடன், சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். ராம்குமார் - வைஜேந்திக்கு பிறந்த மகன்தான் சிவக்குமார்.

சிங்கக்குட்டி ரிலீஸ் சமயத்தில் தான் சிவக்குமாரை, சிவாஜி கணேசன் பேரன் என்று ஸ்ரீபிரியா சொன்னார். அடுத்த நாளே சிவாஜி கணேசன் இருந்து போன் வந்ததது. பத்திரிகையாளர் நண்பர்கள் சிவக்குமார், சிவாஜி கணேசன் பேரன் என்று சொல்ல வேண்டாம். ஏனென்றால் லீகலி அவர் சிவாஜி கணேசன் பேரன் இல்லை என சொல்லப்பட்டது.

இதன்பிறகு ஸ்ரீபிரியாவும் சைலண்ட் ஆகிவிட்டார். சிங்கக்குட்டி படமும் தோல்வியை தழுவியது. அதேபோல் இதுவரை வைஜேந்தி, சிவாவின் அம்மா, ராம்குமார் தான் என கணவர் என்று சொன்னதே கிடையாது.

யாரும் கண்டு கொள்ளவில்லை

ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து மீண்டும் பிரபலம் ஆகலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் இந்த விஷயத்தில் ராம்குமார், பிரபு சொல்வதைத்தான் அனைவரும் கேட்பார்கள். சிவாஜி ரசிகர்களும் இதை ஏற்று கொள்ள மாட்டார்கள்.

ராம்குமார் விஷயம் பற்றி தெரிந்து சிவாஜி வீட்டில் பெரிய சண்டையே நடந்தது. சில விஷயங்களை வெளியே சொல்ல முடியாது. அவரது வீட்டில் துப்பாக்கி சூடு கூட நடந்தது. அதுபற்றி எந்த எஃப்ஐஆரும் போடவில்லை. பெர்ஷனல் விஷயங்களை நாம் தோண்டி எடுக்க கூடாது.

கமல்தான் திருமணம் செய்து வைத்தார்

சிவக்குமாரின் மகனுக்கு கமல்தான் திருமணம் நடத்தி வைத்தார். ஸ்ரீபிரியா படங்களில் நடித்த நன்றிக்காக அவர் செய்திருப்பார். சிவக்குமார், நடிகை சுஜா வாருணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுஜா வாருணி இதுவரை சிவாஜி கணேசனின் அன்னை இல்லை வாசல்படியை கூட மிதிக்கவில்லை.

சிவக்குமார் விஷயத்தில் ராம்குமார், ராம்குமார் மனைவி, பிரபு என யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உங்களுக்கு தெரிந்து விஷயம் தானே என்று என்னிடமே கூறியுள்ளார்கள். பழசை கிளர வேண்டாம். குப்பை என ஒதுக்கி தள்ளிவிட்டதை கிளற வேண்டாம்"

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இந்தக் கட்டுரையில் இடம்பெறும் கருத்துகள் அனைத்துக்கும், தகவல்களுக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பாகாது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.