Ban for Sasikumar Movie: பெண்களை அவமதிக்கும் போஸ்டர்.. சசிகுமார் படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ban For Sasikumar Movie: பெண்களை அவமதிக்கும் போஸ்டர்.. சசிகுமார் படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

Ban for Sasikumar Movie: பெண்களை அவமதிக்கும் போஸ்டர்.. சசிகுமார் படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 30, 2025 04:44 PM IST

Ban for Sasikumar Movie: பெண்களை அவமதிக்கும் விதமாக ஃபஸ்ட் லுக் இருப்பதாக கூறி சசிகுமார் நடித்திருக்கும் மை லார்ட் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெண்களை அவமதிக்கும் போஸ்டர்.. சசிகுமார் படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை
பெண்களை அவமதிக்கும் போஸ்டர்.. சசிகுமார் படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

மை லார்ட் படத்துக்கு தடை

இதுதொடர்பாக சமூக ஆர்வலரான ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், "மை லார்ட் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் கதையின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் சேர்ந்து புகைப்பிடிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பெண்களை அவமதிக்கும் விதமாக இருப்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகியிருக்கும் நிலையில், தடை கோரியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மை லார்ட் படம்

கடந்த 2023இல் வெளியான ஜப்பான் படத்துக்கு பிறகு ராஜு முருகன் இயக்கி வரும் மை லார்ட் படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆர்ச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார் உள்பட பலரும் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு - நிரவ் ஷா. இசை - ஷான் ரோல்டன்.

ஒலிம்பிய மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஃப்ஸ்ட் லுக்கை ஆர்யா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தெலுங்கு இயக்குநர் கிரிஷ், மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ், கன்னட இயக்குநர் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர். படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மை லார்ட் ரிலீஸுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி

கடந்த ஆண்டில் சசிகுமார் நடிப்பில் கருடன், நந்தன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கருடன் படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றது.

இதைத்தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். படத்தின் டீஸர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற. இதுதவிர எவிடன்ஸ், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களுடன் ராஜுமுருகனின் மை லார்ட் படமும் சசிகுமார் பட லிஸ்டில் உள்ளது.

நகைச்சுவை படமாக உருவாகி வரும் டூரிஸ்ட் பேமிலி படத்தில் சசிகுமார் இலங்கை தமிழ் பேசுபவராக தோன்றவுள்ளார். 3 நிமிடங்கள் ஓடக்கூடிய டீஸர் காட்சியில் சசிகுமார் - சிம்ரன் தங்களது இரு மகன்களுடன் இரவு நேரத்தில் வீட்டை காலி செய்து ஊரை விட்டு எஸ்கேப் ஆக முயற்சிக்கும் காட்சி இடம்பிடித்துள்ளது. ககலகலப்பான காமெடி காட்சிகளுடன் படத்தின் டீஸர் அமைந்துள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின் இந்த படத்தை இயக்குகிறார். படம் வரும் கோடை விடுமுறைக்கு ரிலீஸாகும் என தெரிகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.