12 Years of Vazhakku Enn 18/9: நெஞ்சை ரணமாக்கும் க்ளைமாக்ஸ்! ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட நீதியை எதார்த்தமாக சொன்ன படம்
நெஞ்சை ரணமாக்கும் கதையம்சத்துடன் அமைந்திருக்கும் வழக்கு எண் 18/9 பிற இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. படம் வெளியான ஆண்டில் இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பரிந்துரை லிஸ்டிலும் இடம்பிடித்தது.

நாம் அன்றாடம் செய்தியாக படிக்கும் குற்ற சம்பவங்களுக்கு பின்னணியால் யாரும் அறிந்திடாத பல உண்மை சம்பவங்களும் இருக்கும். அவை குற்றம் சாட்டப்பட்டவரின் நியாயம், அவருக்கு இழைக்கப்படும் அநீதியைாகவும் இருக்கும். அப்படியொரு விஷயமாக தவறு இழைக்காதவார் எப்படி சட்டத்தின் மூலம் குற்றவாளி ஆக்கப்படுகிறார், என்பதை விவரிக்கும் படமாக வழக்கு எண் 18/9 படத்தின் கதை இருக்கும்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து காதல், கல்லூரி படங்களை இயக்கிய கவனத்தை ஈரத்த பாலாஜி சக்திவேல், மற்றொரு உண்மை சம்பவத்தை தழுவி எடுத்த படம் தான் வழக்கு எண் 18/9. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் புதுமுக நடிகர்களாக ஸ்ரீ, ஊர்மிளா மகந்தா, மிதுன் முரளி, மனிஷா யாதவ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். போலீஸ் கதாபாத்திரத்தில் தோன்றி வில்லத்தனத்தில் மிரட்டிய முத்துராமன் அறிமுக படம் இதுதான். ரித்திகா சீனிவாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.,
வழக்கு எண் 18/9 கதை
தள்ளுவண்டி கடையில் வேலை பார்க்கும் ஸ்ரீ, வீட்டு வேலை செய்யும் ஊர்மிளா மகந்தா இடையே முதலில் மோதல் பின்னர் காதல் மலர்கிறது. இதற்கிடையே பள்ளியில் படிக்கும் மனிஷா யாதவ், சக மாணவன் மிதுன் மீது ஈர்ப்பு வருகிறது.
ஒரு கட்டத்தில் மிதுனின் தவறான எண்ணத்தை புரிந்து விலகுகிறார் மனிஷா. இதனால் கோபம் அடையும் மிதுன், மனிஷாவை பழிவாங்க அவர் மீது ஆசிட் வீச முயற்சித்து, மனிஷா வீட்டில் பணிபுரியும் வேலைக்காரியான ஊர்மிளா மீது வீசுகிறான்.
இதனால் வழக்கு தொடரப்பட, ஊர்மிளா மீது ஆசிட் வீசிய பழியை கட்டாயத்தின் பேரில் தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறார் ஸ்ரீ. இறுதியில் இந்த வழக்கில் உண்மை குற்றவாளி தப்பிக்க காரணமாக இருக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் முத்துராமன் நேரும் கதியை நெஞ்சை ரணமாக்கும் கிளைமாக்ஸாக படத்தை முடித்திருப்பார்கள்.
படத்தில் இருக்கும் நுண் அரசியல்
கந்து வட்டி கொடுமையால் வட மாநிலத்துக்கு வேலை செல்லும் ஸ்ரீ, பணபழத்தால் ஏழைகள் எவ்வாறு நசுக்கப்படுகிறார்கள் போன்ற சில நுண் அரசியல் விஷயங்கள் படம் நெடுகிலும் இடம்பிடித்திருக்கும்.
படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேனான் 7டி என்ற ஸ்டில் கேமராவில் இந்த படத்தை படமாக்கினார். தமிழ் சினிமாவுக்கு இது புதுமையாக இருந்தது.
விருதுகளும் ரீமேக்கும்
முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருந்தாலும் படத்தின் கதை, திரைக்கதையால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் நல்ல வசூலையும் பெற்றது. விமர்சக ரீதியாக பாராட்ட பெற்றதுடன் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. வங்காள மொழியில் படம் ரீமேக் செய்யப்பட்டது.
60வது தேசிய விருதில் சிறந்த தமிழ் திரைப்படமாகவும், சிறந்த மேக்கப் கலைஞருக்கான விருதையும் வென்றது. 2012 ஆண்டின் தமிழ்நாடு அரசின் விருதையும் வென்றது. அதேபோல் படம் வெளியான ஆண்டில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் தேர்வுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம்பிடித்திருந்து.
ஏழைக்கு ஒரு மாதிரியும், பணக்காரனுக்கு ஒரு மாதிரியாகவும் நீதி எப்படி மாறுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லிய விதத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய படமாக வழக்கு எண் 18/9 உள்ளது. சிறந்த க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் வழக்கு எண் 18/9 வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்