‘ஒரு பிராமணப் பொண்ண போயி இப்படி பண்ணுவியான்னு.. உனக்கு ஏன் இந்த குரூரபுத்தி’ - சேது பார்த்து பாலுமகேந்திரா சொன்னது என்ன?
அவர் அலுவலகத்திற்கு என்னை தனியாக அழைத்தார். அங்கு நான் சென்ற போது, என்னிடம் அவர், பாலா உனக்கு ஏன் இவ்வளவு குரூர புத்தி...- சேது பார்த்து பாலுமகேந்திரா சொன்னது என்ன?
சேது திரைப்படத்தை பார்த்து பாலுமகேந்திரா கூறியது குறித்து பாலா பேசி இருக்கிறார்.
பாலுமகேந்திரா கூறியது என்ன?
இது குறித்து கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு அவர் பேசும் போது, ‘சேது திரைப்படத்தை பார்த்த பாலு மகேந்திரா, அங்கு படக்குழுவினர் இருந்த காரணத்தால், சபைக்காக பாலா இயக்கிய திரைப்படத்தை பார்க்காமலேயே இறந்து போய் விடுவேனோ என்று நினைத்தேன்; ஆனால் நல்ல வேலையாக நான் அவன் இயக்கிய படத்தை பார்த்து விட்டேன் என்று கூறினார். இதைக் கேட்ட அனைவரும் பாலு மகேந்திரா இப்படி பேசிவிட்டாரே என்று பேசினார்கள்.
ஆனால், அதன் பின்னர் அவர் அலுவலகத்திற்கு என்னை தனியாக அழைத்தார். அங்கு நான் சென்ற போது, என்னிடம் அவர், பாலா உனக்கு ஏன் இவ்வளவு குரூர புத்தி... பாவம் படிக்கிற ஒரு பிராமணப் பெண், அவளே ஒரு அப்பாவியாக இருக்கிறாள். அந்தப் பெண்ணை ஒரு ரவுடி பையனை வைத்து மிரட்டி, காதல் செய்ய வைக்கிறாய்; அதன் பின்னர் விபத்து ஒன்றில் அவனுக்கு ஏதோ ஒன்று ஆகிவிடுகிறது; அதில் அவளுடைய வாழ்க்கை பாழாகிறது; சரி, அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு முறை பையன் இருக்கிறான்.
அவனுடனாவது அவளை வாழ வைத்திருக்கலாம். அதுதான் சரியானதாகவும் இருக்கும்; இப்போது கதாநாயகன் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அவளுடைய வாழ்க்கையையும் பாழாக்கி, முறை பையனின் வாழ்க்கையையும் பாழாக்கி விட்டான்; கூடவே, கடைசியில் மீண்டும் அவனை பைத்தியக்காரனாகவே கொண்டு சேர்க்கிறாய்; உன்னால் எப்படி இப்படி குரூரமாக சிந்திக்க முடிகிறது.
நீ பெத்த பிள்ளையை நீயே எப்படி?
அந்த பெண் கதாபாத்திரம் என்பது நீ பெத்த பெண்; நீ பெத்த பிள்ளையை நீயே கழுத்தை நெறித்துக் கொல்வாயா.. ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்.. என்று மிகவும் காட்டமாக திட்டினார். உடனே நான் உங்கள் அளவுக்கு மென்மையானவன் இல்லை.. எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.. எனக்குத் தெரிந்ததை தானே நான் செய்ய முடியும்; உங்கள போலவே நானும் படம் எடுத்தால், எனக்கான அடையாளம் எங்கே இருக்கும் உங்களை போல படம் எடுப்பதற்கு தான் நீங்கள் இருக்கிறீர்களே என்றேன்; அதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்