அகமதாபாத் விமான விபத்து.. ‘முன்னாள் மனைவிக்கு இந்நாள் மனைவியுடன் பிரார்த்தனை’ - நடிகர் பாலா உருக்கம்!
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு நடிகர் பாலா மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாலாவின் முன்னாள் மனைவி எலிசபெத் உதயனின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கின்றனர்.

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே அங்குள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனை மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி டாக்டர் எலிசபெத் உதயனும் அதே மருத்துவக் கல்லூரியில்தான் படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பாதுகாப்பாக இருக்க தன் மனைவி கோகிலாவுடன் சேர்ந்து கடவுளை வேண்டிக்கொள்வதாக நடிகர் பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பாதுகாப்பாக இருங்கள்
அந்தப்பதிவில் ‘அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. நம்மை நாமே எப்படி ஆறுதல்படுத்திக் கொள்வது என்று தெரிய வில்லை.’ என்று குறிப்பிட்டு இருந்தார்.