Bakiyalakshmi Serial : ராதிகாவை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி.. வாயடைத்து போன கோபி.. சரமாரி கேள்வி கேட்ட பாக்கியா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bakiyalakshmi Serial : ராதிகாவை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி.. வாயடைத்து போன கோபி.. சரமாரி கேள்வி கேட்ட பாக்கியா!

Bakiyalakshmi Serial : ராதிகாவை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி.. வாயடைத்து போன கோபி.. சரமாரி கேள்வி கேட்ட பாக்கியா!

Divya Sekar HT Tamil
Jan 24, 2025 01:14 PM IST

Bakiyalakshmi Serial : ஈஸ்வரி ராதிகாவிடம் கோபி கூப்பிட்டால் நீ வந்து விடுவாயா? அப்படியே வந்தாலும் மேடை ஏறி விடுவாயா? உனக்கு எங்கே போனது அறிவு என ராதிகாவிடம் கேள்வி கேட்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்

Bakiyalakshmi Serial : ராதிகாவை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி.. வாயடைத்து போன கோபி.. சரமாரி கேள்வி கேட்ட பாக்கியா!
Bakiyalakshmi Serial : ராதிகாவை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி.. வாயடைத்து போன கோபி.. சரமாரி கேள்வி கேட்ட பாக்கியா!

ஏன் இப்படி செய்தீர்கள்

இனியாவிடம் பாக்கியா சாரி கேட்கிறார். அதற்கு இனியா நீ என்ன தப்பு செய்தாய் அம்மா நீ எதற்கு சாரி கேட்கிறாய் தேவையில்லாத ஒருத்தர் இப்பொழுது ஸ்டேஜில் ஏறியதுதான் எனக்கு பிரச்சனை. எதற்கு டாடி அவங்களை இங்க கூட்டிட்டு வந்தீங்க எதற்கு அவங்கள மேடையில் கூட்டி வந்தீங்க அம்மாவும் அப்பாவும் கூட இருக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். யாரோ ஒருவர் என் உடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை ஏன் இப்படி செய்தீர்கள் என இனியா கேட்கிறார்.

அப்போது அருகில் இருந்த சக போட்டியாளர்கள் இனியவை பார்த்து சிரிக்கிறார்கள். இதனால் இனியா இன்னும் மனம் வருந்துகிறார். அப்போது இனியாவை அவரது நண்பர்கள் வந்து கேலி செய்கிறார்கள். நீ நடனமாடி தான் பேமஸ் ஆவாய் என நினைத்தோம் ஆனால் நடனம் ஆடுவதற்கு முன்னாலே நீ ஃபேமஸ் ஆகிவிட்டாய் என கேலி செய்கிறார்கள்.

கோபத்தின் உச்சியில் இனியா

பின்னர் நடன போட்டி ஆரம்பிக்கிறது. இதில் இனியாவை அழைக்கிறார்கள் இனியா மேடைக்கு வந்து பாடல் ஒலித்தும் ஆடாமல் அப்படியே நிற்கிறார். பின்னர் கோபி, பாக்கியா என அனைவரும் என்கரேஜ் செய்ய பின்னர் இனியா நடனமாடுகிறாள்.

பின்னர் வெற்றியாளர்களை அறிவிக்கிறார்கள். அதில் இனியா மூன்றாவது இடம் பிடித்தார். பின்னர் இனியா மிக சோகத்துடன் அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறார். அங்கு வந்து அப்பா கொடுத்த பொக்கே போட்டு உடைக்கிறார். நான் முதல் பரிசு வாங்க வேண்டிய நபர் ஆனால் இப்பொழுது மூன்றாவது பரிசு வாங்கி இருக்கிறேன். இன்னைக்கு நடந்த விஷயத்தில் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையா டாடி என இனியா கேட்க அப்படி இல்லடா என சொல்ல இவங்க யாரு டாடி எனக்கு, இவங்க எதுக்கு என்னோட நிகழ்ச்சிக்கு வரணும் என கேட்கிறார்.

ராதிகாவை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி

ஈஸ்வரி ராதிகாவிடம் கோபி கூப்பிட்டால் நீ வந்து விடுவாயா? அப்படியே வந்தாலும் மேடை ஏறி விடுவாயா? உனக்கு எங்கே போனது அறிவு என ஈஸ்வரி ராதிகாவிடம் கேள்வி கேட்கிறார். ராதிகாவை பார்த்து இனியா எத்தனை நாள் நான் இதை பயிற்சி செய்தேன் தெரியுமா? எல்லாம் வேஸ்டா போயிடுச்சு இவங்க ஒருத்தங்க தான் எல்லாத்துக்கும் காரணம் என அழுது கொண்டே கூறுகிறார்.

இனியா கோபத்தில் இப்படி எல்லாம் பேசாத என பாக்கிய கூற அதற்கு செழியன் இனியா கூறுவதில் என்ன தவறு இருக்கிறது அம்மா என கேட்கிறார். என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன பார்த்து அன்னைக்கு ரோட்ல நின்னு சண்டை போட்டு பேமஸ் ஆனீங்க இன்னைக்கு இந்த காமபிடிஷனுக்கு ஒன்னா வந்து பாப்புலர் ஆக போறீங்களா என கேட்கிறார்கள் எங்களுக்கெல்லாம் ஒரு அம்மா தான் உனக்கெல்லாம் ரெண்டு அம்மாவா என என்ன பார்த்து கேக்குறாங்க.

இதைக் கேட்ட ஈஸ்வரி யார் உனக்கு அம்மா உங்க அப்பா இவளை கல்யாணம் பண்ணிட்டா இவன் உனக்கு அம்மா ஆகிடுவாளா என சொல்ல எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க வார்த்தையை விடாதீங்க என கோபி சமாதானம் படுத்த முயற்சி செய்கிறார்.

இனியாவிடம் சாரி கேட்ட ராதிகா

நீ என்ன குழந்தையா மற்ற விஷயத்தில் எல்லாம் அவ்வளவு பேசுவ கூப்பிட்டதும் இளிச்சிட்டு வந்து மேடையில் வந்து நிற்பாயா என ராதிகாவை பார்த்து ஈஸ்வரி கேட்கிறார்.எனக்கு எனக்கு நீங்க பேமிலியா இருக்கும்போது கூட வந்து நிக்கணும் என ஆசை எல்லாம் இல்ல சாரி நான் அப்படி பண்ணிருக்க கூடாது என ராதிகா சொல்கிறார்.

நம்ம ஃபேமிலில சந்தோஷம் இல்லாம போனதுக்கு காரணம் இவங்கதான், நான் காம்பிடிஷன்ல 3 பிளேஸ் வந்ததுக்கு காரணமும் இவங்கதான், என் பிரண்ட்ஸ் முன்னாடி இப்ப அசிங்கப்பட்டதற்கும் இனிமே அசிங்கப்பட போவதற்கும் காரணம் இவங்கதான் முடிஞ்சா எனக்கு சப்போர்ட்டா இவங்க கிட்ட பேசுங்க அம்மா என இனியா பாக்கியாவிடம் கூறுகிறார்.

ராதிகாவுக்கு ஆதராவாக பேசிய பாக்கியா

பின்னர் ராதிகா இனியாவிடம் சாரி கேட்டுவிட்டு மேலே செல்கிறார். பின்னர் பாக்கியா எல்லா தப்பு அவங்க பண்ண மாதிரி அவங்கள எதுக்கு எல்லாரும் திட்டுறீங்க. அவங்க பாட்டுக்கு ஆபீஸ்க்கு போறேன்னு சொன்னவங்கள தடுத்து அங்க கூட்டிட்டு வந்தது உங்க அப்பா, மேடைக்கும் கூட்டிட்டு வந்தது உங்க அப்பா, உன் பிரண்ட்ஸ் கிண்டல் பண்ணதுக்கு காரணம் உங்க அப்பா என பாக்கியா சொல்ல, இப்போ எதுக்கு எல்லா தப்பையும் கோபி மேல சொல்ற என ஈஸ்வரி கேட்க நான் நடந்ததை தான் சொன்னேன் இனியாவுக்கு கோபம் கண்ணை மறைக்கிறது. அதை தான் நான் விளக்கி சொல்கிறேன் என பாக்கியா சொல்கிறார்.

பின்னர் கோபி நான் இப்படி எல்லாம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என சொல்ல பாக்கியா உங்க பேராசை தான் இதற்கு காரணம் அவங்களும் வேணும் இவங்களும் வேணும் என நினைத்து செய்வது தான் பெரிய தப்பு. அதை பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிந்தது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.