செம கடுப்பான ஈஸ்வரி.. ஆட்டத்தை ஆரம்பித்த ராதிகா.. வீட்டிற்கு வந்த லெட்டர்.. பாக்கிய எடுக்க போகும் முடிவு என்ன?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். தரமான சம்பவம் காத்திருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? கேசை வாபஸ் வாங்குவாரா என்பதை பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். இனியா ஹாலில் அமர்ந்து தனது டான்ஸ் நிகழ்ச்சிக்காக மேக்கப் போட்டு பார்க்கிறார். அதற்காக அவருடைய மேக்கப் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து ஒன்றொன்றாக சோதனை செய்து பார்க்கிறார்.
அப்போது திடீரென இனியாவுக்கு போன் கால் வருகிறது. அதை பேசுவதற்காக அவர் வெளியே செல்கிறார். பின்னர் அந்த சமயத்தில் அங்கு வரும் மயு மேக்கப் ஐட்டத்தை பார்த்து ஆசைப்பட்டு அதனை எடுத்து போட்டு அழகு பார்க்கிறார். அப்போது அங்கு வந்த இனியா கோபமடைந்து ஒருவருடைய பொருளை எப்படி கேட்காமல் எடுப்பாய் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
பாக்கியலட்சுமி என்ட்ரி
அந்த சமயத்தில் அங்கு ஈஸ்வரி என்ட்ரி கொடுக்கிறார். எப்போ பிரச்சனை வரும் ராதிகாவையும் மயூவையும் வீட்டை விட்டு துரத்தலாம் என காத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஈஸ்வரி வந்து மயூவை உன்னை யார் இதையெல்லாம் எடுக்க சொன்னது. நீ ஹால் எதற்கு வந்தாய் ரூமில் இருக்க வேண்டியதுதானே? இருக்க வேண்டிய இடம் தெரிந்து இருக்க வேண்டும் என மயூவை திட்டுகிறார்.
மயு அழுது கொண்டே ஈஸ்வரி சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு பாக்கியலட்சுமி என்ட்ரி கொடுக்கிறார். என்ன நடந்தது என பாக்கியலட்சுமி கேட்க அதற்கு ஈஸ்வரி நடக்காததை நடந்தது போல சித்தரித்து மயுவை குற்றம் சாட்டுகிறார். இதைப் பார்த்த இனியா சற்று ஷாக் ஆகிறார். பாட்டி ஏன் இப்படி சொல்கிறார் என்பது போல அவர் ரியாக்ஷன் கொடுக்கிறார்.
தேவையில்லாமல் மயூவை திட்டும் ஈஸ்வரி
பாட்டி சொல்வதை கேட்டு மயு நான் அப்படி எதுவும் செய்யவில்லை. நான் பொருளை எந்த இடத்தில் எடுத்தேனோ அந்த இடத்திலேயே வைத்து விட்டேன் என அழுது கொண்டே கூறுகிறார். பின்னர் இனியாவிடம் பாக்கியலட்சுமி என்ன நடந்தது என கேட்க இனியா மயு என்னுடைய பொருட்களை எடுத்து பயன்படுத்தினால் நான் ஏன் என தான் கேட்டேன் மயுவை நான் திட்டவில்லை பாட்டிதான் தேவையில்லாமல் மயூவை திட்டுகிறார் என கூறுகிறார்.
அந்த டைம் ராதிகா மற்றும் கோபி என்ட்ரி கொடுக்கிறார்கள். அவர்களும் வந்து பிரச்சனையை பார்த்து என்ன நடந்தது என்ன விசாரிக்க நடந்ததை எல்லாம் இனியா சொல்ல இதனை ஈஸ்வரி தான் வேறு மாதிரி கொண்டு செல்கிறார் என்பதை உணர்ந்த பாக்கியலட்சுமி. அந்த பிரச்சனையை பேசி தீர்த்து வைக்கிறார். பின்னர் இனியாவும் மயுவிடம் மன்னிப்பு கேட்கிறார். ராதிகாவும் ஒருவர் பொருளை நீ கேட்காமல் எடுத்தது தப்புதான் எனவே இனியாவிடம் மன்னிப்பு கேள் எனக் கூற மயுவும் மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனை முடிவுக்கு வருகிறது.
ராதிகா செய்யும் சூழ்ச்சி
பின்னர் ராதிகா வீட்டு ஹாலில் அமர்ந்து சத்தமாக பாடல் வைத்து டிவி பார்க்கிறார். இதனைப் பார்த்து காண்டான ஈஸ்வரி என்ன திமிராக அமர்ந்து பாடலைக் கேட்கிறாய் என கேள்வி கேட்க அதற்கு நான் இதற்கு வாடகை கொடுத்து தான் பார்க்கிறேன் இதற்கு எனக்கு உரிமை உள்ளது என ராதிகா கூறுகிறார். பின்னர் ஈஸ்வரி இதைக்கேட்டு கோபமடைந்து சத்தம் போட சத்தத்தை கேட்டு கோபி கீழே வர அந்த டைம் ராதிகா ரிமோட்டை ஈஸ்வரி கையில் டக்கென கொடுத்து இப்போ ரிமோட் வேலை செய்கிறது நீங்கள் இப்போ டிவி பார்க்கலாம் என பிளேட்டையே திருப்பி போடுகிறார்.
பின்னர் கோபி நான் வெளியே செல்ல வேண்டும். வேலையாக நான் வெளியே சென்று வருகிறேன் என ஈஸ்வரியிடம் கூற நீ தனியாக போக வேண்டாம் நான் செழியனை போன் செய்து வர சொல்கிறேன். அவன் உன்னை அழைத்து செல்வான் என ஈஸ்வரி கூறுகிறார்.
எனவே ஈஸ்வரி போனை எடுக்க ரூமுக்கு சென்ற டைம் ராதிகா நான் உங்களை அழைத்து செல்கிறேன் வாருங்கள் என கோபியிடம் கூற, நான் அம்மாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என கோபி சொல்ல நீங்கள் என்ன சின்ன குழந்தையா அம்மாவிடம் சொல்லி வர நான் அழைத்துச் செல்கிறேன் என கூறி ஈஸ்வரி வருவதற்குள் கோபியை அழைத்து செல்கிறார் ராதிகா.
செம கடுப்பான ஈஸ்வரி
பின்னர் செம கடுப்பான ஈஸ்வரி வரட்டும் நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன் என குடும்பத்தையே ஹாலில் அமர வைத்து அவர்களுக்காக காத்திருக்கிறார். அந்த டைம் இருவரும் என்ட்ரி கொடுக்க எதற்கு நீ கோபியை அழைத்து சென்றாய் என ராதிகாவிடம் கேட்க உங்கள் பயனை எப்படி பாதுகாப்பாக கூட்டி சென்றேனோ அப்படியே கொண்டு வந்து சேர்த்து விட்டேன் என ராதிகா கூறுகிறான்.
இந்த பிரச்சனை பூகம்பமாக வெடிக்கும் என காத்திருந்த நிலையில் பாக்கியலட்சுமிக்கு திடீரென ஒரு கொரியர் வருகிறது. அதில் கோபி சம்பந்தமான கேஸ் நீதிமன்றத்தில் இருந்து வந்திருக்கிறது. இதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைந்தது. நாளை தரமான சம்பவம் காத்திருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? கேசை வாபஸ் வாங்குவாரா என்பதை பார்ப்போம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்