தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Badri: விஜய்யின் ஹிட் படங்கள் வரிசையில் முக்கியமான படம் பத்ரி.. 100 நாட்ககளை கடந்து ஓடிய வெற்றி படம்!

Badri: விஜய்யின் ஹிட் படங்கள் வரிசையில் முக்கியமான படம் பத்ரி.. 100 நாட்ககளை கடந்து ஓடிய வெற்றி படம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 12, 2024 06:21 AM IST

Badri: 2001 ஏப்ரல் 12 அன்று தம்முடு என்ற தெலுங்கு பட தழுவலாக தமிழில் விஜய்யை வைத்து எடுத்த படம். விளையாட்டு மற்றும் காதலை அடிப்படையாக கொண்டு சராசரி குடும்பத்தில் வாழும் இளைஞனை மையம் கொண்ட கதை. அருண் பிரசாத் இயக்கி உள்ளார்.

விஜய்யின் ஹிட் படங்கள் வரிசையில் முக்கியமான படம் பத்ரி!
விஜய்யின் ஹிட் படங்கள் வரிசையில் முக்கியமான படம் பத்ரி!

ட்ரெண்டிங் செய்திகள்

டைட்டில் ரோல் பத்ரி நாதமூர்த்தியாக விஜய்யும் ஜானு எனும் ஜானகியாக பூமிகாவும் மமதியாக மோனலும் சகோதரர் வெற்றி யாக ரியாஸ் கான் ரோஹித் ஆக பூபிந்தர்சிங் இவர்களுடன் கிட்டி மலேசியா வாசுதேவன் விவேக் தாமு சஞ்சீவ் மீனாகுமாரி அனுமோகன்ஹூசைனி கசான்கான் பாண்டு ஆகியோர் நடித்துள்ளனர்

சிறிய உணவு விடுதி நடத்தி வரும் விஸ்வநாதனுக்கு இரண்டு மகன்கள். வெற்றி மற்றும் பத்ரி தான் அந்த இரண்டு மகன்கள். வெற்றி காலேஜ் லெவல் கிக்பாக்ஸராவார். ஆனால் இன்னோரு மகன் ஜாலியாக சுற்றி திரியும் இளைஞர்.

பொறுப்பு இல்லாமல் நண்பர்கள் உடன் சுற்றி திரியும் இளைஞன் பத்ரியை பற்றிய கவலையில் திட்டினாலும் கண்டு கொள்ள மாட்டார். அழகு ஹவுரா ஜூட் என்று ஒரு நண்பர்கள் பட்டாளத்தோடு திரிபவர் பத்ரி. பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சிறுவயது தோழி ஜானு பத்ரி யை விரும்புகிறார். ஆனால் பத்ரி அவரிடம் இருந்து பணத்தை பெற்று செலவு செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறாரே தவிர ஜானுவின் காதலை ஏற்கவில்லை. 

அவருடைய தந்தை கடையில் இருந்து கார் மற்றும் பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறார். இதன் மூலம் தன்னை பணக்கார பையனாக வெளியே காட்டி கொள்கிறார். கல்லூரியில் படிக்கும் மமதியை சந்திக்கிறார். மமதி பணக்கார பெண்ணாக இருப்பதால் அவரை விரட்டி காதலிக்கிறார் பத்ரி. மமதியும் காதலை ஏற்கிறார். 

ஒருகட்டத்தில் பத்ரியை பற்றி மமதிக்கு தெரிந்து விட தனது தந்தையின் முன்னால் பத்ரியை அவமானப்படுத்துகிறார். பக்கத்து வீட்டு பெண் ஜானுவிடம் பணம் பெற்று கொண்டு சுற்றி திரியும் பத்ரியை அவர் அப்பா வீட்டில் இருந்து வெளியேற்றி விடுகிறார். இக்காலத்தில் ஜானு பத்ரிக்கு ஆதரவாக இருக்கிறார். பத்ரியும் ஜானுவின் அன்பை புரிகிறார்.

இந்த சூழலில் கிக்பாக்சிங் போட்டியில் பத்ரியின் அண்ணனை சக போட்டியாளர் ரோஹித் கடுமையாக தாக்கி விடுகிறார். இதனால் வெற்றி உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. ரோஹித் மமதியின் காதலன் என்பதும் சகோதரனை தாக்கியவன் என்பதால் பத்ரிக்கு ஆத்திரம் உண்டாகிறது. கடுமையான பயிற்சி பெற்று பாக்ஸிங் களத்தில் ரோஹித்தை பத்ரி பரபரப்பான ஆட்டத்தில் எதிர் கொள்கிறார். பத்ரி போட்டியிலும் காதலிலும் வென்றாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

ரமண கோகுல் படத்தில் ஒலிப்பதிவையும் பின்னணி இசையை தேவிஶ்ரீபிரசாத் மேற்கொண்டனர். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பழனிபாரதியால் எழுதப்பட்டது. சுமார் பத்து பாடல்கள் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல உதவின. 

2000 காலகட்டத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி, பிரியமானவளே, நண்பர்கள் என்று ஹாட்ரிக் கொடுத்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி பல தியேட்டர்களில் நூறுநாட்கள் என்ற இலக்கை தாண்டி ஓடியது . அந்த வகையில் பத்ரியும் முக்கியமான படமாக விஜயின் ஆரம்ப கால கேரியரில் அமைந்துள்ளது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்