தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bade Miyan Chote Miyan Ott: படே மியான் சோட் மியான் எப்போது ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும்?

Bade Miyan Chote Miyan OTT: படே மியான் சோட் மியான் எப்போது ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும்?

Aarthi Balaji HT Tamil
Apr 11, 2024 12:04 PM IST

படே மியா சோட் மியா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படே மியான் சோட் மியான்
படே மியான் சோட் மியான்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த பிரமாண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். இந்தப் படம் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளிவந்தது. இதற்கிடையில் படே மியா சோட் மியா படத்தின் ஓடிடி பார்ட்னர் விவரம் வெளியாகி உயுள்ளது.

ஸ்ட்ரீமிங் தளம்

படே மியான் சோட் மியான் திரைப்பட ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு பிளாட் பாரம் பெரிய தொகையைக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

திரையரங்குகளுக்குப் பிறகு, படே மியா சோட் மியா படம் நெட்ஃபிளிக்ஸ்  ஓடிடிக்கு வரும். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இன்னும் 8 வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

ஒரு நாள் ஒத்திவைப்பு

படே மியா சோட் மியா திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. முன்னதாக அந்த தேதியை படக்குழு நிர்ணயித்தது. இருப்பினும், ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதால் படக்குழு தேதியையும் மாற்றியது. இப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகிறது. பண்டிகையை தொடர்ந்து ரிலீஸ் திட்டம் மாறியுள்ளது. இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்

படே மியா சோட் மியா திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.350 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பாடல்களுக்காக படக்குழு அதிக செலவு செய்துள்ளதாக தெரிகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சில சமயங்களில் ரூ.4 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார் . இந்தப் படத்தை பூஜா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏஏஇசட் பிலிம்ஸ் ஆகியவற்றின் கீழ் ஜாக்கி பாக்னானி, வாசு பக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலி அப்பாஸ் ஜாபர், ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா ஆகியோர் தயாரித்து உள்ளனர்.

படே மியா சோட் மியா படத்தின் டிரெய்லர் உயர் மின்னழுத்த ஆக்‌ஷன் மற்றும் பிரமாண்டத்துடன் சுவாரஸ்யமாக உள்ளது . இந்த படத்தில் அக்‌ஷய் மற்றும் டைகருடன் மலையாள நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், மனுஷி சில்லர், டெம்ப்ளே எஃப், சோனாக்ஷி சின்ஹா, ரோனித் போஸ் ராய், மனிஷ் சவுத்ரி, சஹாப் அலி மற்றும் பவன் சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு ஜூலியஸ் பாக்கியம் மற்றும் விஷால் மிஸ்ரா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

அஜய் தேவ்கன் நடித்துள்ள மைதன் படமும் இன்று (ஏப்ரல் 11) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் ஹைதராபாத் சையது அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து அமித் சர்மா இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரியாமணியும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்