Bad Girl: பெண்களில் புனிதம்.. பத்தினித் தன்மை.. ஒரே போடாய் போட்ட இயக்குநர் வர்ஷா
Bad Girl: பெண்களை புனிதமானவர்களாக சித்தரிக்கும் படங்களுக்கு நடுவே அவளின் உண்மையான விருப்பம் எப்படி இருக்கும் என்பதை படமாக இயக்கி இருப்பதாக இயக்குநர் வர்ஷா பரத் கூறியுள்ளார்.

Bad Girl:வெற்றி மாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத் பேட் கேர்ள் எனும் படத்தை இயக்கி இருக்கிறார். வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவான இந்தப் படம் பெண்கள் மீது கட்டவிழுத்து விடப்பட்ட கதாப்பாத்திர தன்மைக்கு எதிராக அமைந்துள்ளது.
பெண் சுதந்திரம்
இளம் பெண்ணின் காதல், தனிப்பட்ட விருப்பங்களில் அவர்களின் சுதந்திரமான முடிவு எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மேலும், சமூகத்தில் நடந்த சில சம்பவங்களையும் மையமாக வைத்து டீசர் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மாதீன எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பத்தினியா இருக்கணும்
இந்நிலையில், சத்யம் தியேட்டரில் நடந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குநர் வர்ஷா பரத் பேசியதும் வைரலானது. அந்த நிகழ்ச்சியில், "தமிழ் சினிமாவில் பெண் என்றால் பூ மாதிரி இருக்கணும், பத்தினியா இருக்கனும், தெய்வம் மாதிரி இருக்கணும்ன்னு, தாய் மாதிரி இருக்கணும்ன்னு சொல்லி தான் கதை எழுதுறாங்க.
இது பெண்கள் தோள் மீது வைக்குற அதிகப்படியான அழுத்தமா இருக்கு. அதுனால, நான் பெண்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்க நெனச்சேன்.
அந்தக் கதையைக் கேட்டு ராதா எப்படி ரியாக்ட் பண்ணுனாங்களோ அதே மாதிரி தான் எல்லா பொன்னுங்களும் ரியாக்ட் பண்ணுனாங்க. ஆனா, பசங்ககிட்ட இருந்து ஒரு மிக்ஸ்ட்டு ரியாக்ஷன் தான் வந்தது.
விவாதத்தை தொடங்கும்
நான் நெனக்குறேன் இந்தப் படம் பெண்கள் பத்தின ஒரு விவாதத்த தொடக்கி வைப்பதா கூட இருக்கலாம். இந்தப் படம் பெண்கள் எப்படி வாழனும்ன்னு சொல்ற படம் இல்ல. எல்லோரும் எப்படி இருக்கணும்ன்னு என்னால் சொல்லவும் முடியாது.
இந்தப் படத்துல வர பொன்னு ஒரு ஹீரோ எல்லாம் கிடையது. அந்த பொன்னு ஏதோ ஒரு விஷயத்துக்காகவும், வாழுறதுக்காகவும் போராடுறா. அந்த வாழ்க்கைய கடந்து போகவும் போறாடுறா. அதுக்காக அவள எல்லாரும் ஃபாலோ பண்ணனும்ன்னு அவசியம் இல்ல.
ஹீரோ மனப்பான்மை
பொதுவாவே படம் எடுக்குறவங்க மக்கள் எப்படி வாழனும்ன்னு எல்லாம் சொல்றது இல்ல. ஒரு ஆண் ஹீரோ இந்தப் படத்துல வர்ற பெண்ணவிட ரொம்ப மோசமா நடந்துகிட்டாலும் அவர கொண்டாடுறத எல்லாம் நான் பாத்து தான் வளர்ந்திருக்கேன். அதுனால இந்த கேரக்டரையும் நாம கொஞ்சம் ஏத்துக்கலாம்ன்னு நினைக்குறேன்.
நான் இந்தப் படத்துல பெண்கள் சரக்கடிக்கனும்ன்னு எல்லாம் சொல்ல வரல. இது ஒரு பெண்ண பத்தின கதை. அவ்வளவு தான். அதுவும் பெண்களும் மனிதர்களா இருக்கணும்ன்னு தான் நான் சொல்ல வர்றேன். அவங்க புனிதர்களா இருக்க வேண்டிய அவசியம் இல்ல.
பெண்கள் வரணும்
இந்தப் படத்துல ஆரம்பத்துல நான் எழுதுன கதைய நான் எடுக்கல. ஏன்னா, ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் என்னோட ஸ்கிரிப்ட் மாறிட்டே இருந்தது. அதுனால நான் ஒரு நல்ல படமா குடுத்திருக்கேன்னான்னு தெரியாது. ஆனா, இந்த படத்த யூரோப்பியன்ஸ் ஏத்துக்கிட்டதால அத நான் மைண்ட்ல வச்சிட்டு இந்தப் படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கேன்.
பெண்கள் எல்லாம் தியேட்டருக்கு வரணும். ஹீரோயிசமான படங்கள் எல்லாம் பெண்களுக்கென எடுக்கப்படல. அதுனால, இந்தப் படத்த தியேட்டர்ல வந்து பாருங்க" என படத்தின் இயக்குநர் வர்ஷா பேசியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்