Actress Kotravai: ‘அங்க பெரிசா ரிஸ்க் கிடையாது அதுதான்..’ - அதிகரிக்கும் ஆண்டி வெறியர்கள்! - கொற்றவை பளார் பேட்டி!
ஒரு பெண் படித்திருந்தாலும் கூட, அவள் சமைக்க வேண்டும், குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வேலைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பு இன்னமும் சமூகத்தில் இருக்கிறது.

பிரபல நடிகையான கொற்றவை திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு சரியானதா? இல்லை தவறானதா? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து கலாட்டா சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், “திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவை பொருத்தவரை, அதில் ஆண் ஈடுபடும் பொழுது, அது பெரிதாக விவாதத்திற்கு உள்ளாகாது.
ஆனால் அந்த இடத்தில் ஒரு பெண் இருந்தால், அது பெரிய விவாதத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. உண்மையில், ஒருவனுக்கு ஒருத்தி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் சிலர் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், சிலருக்கு மாறுதல்கள் தேவைப்படலாம். பொதுவாக திருமணம் செய்து கொள்ளும் இருவருக்கும் வெவ்வேறான எதிர்பார்ப்பு இருக்கும்.
ஒரு பெண் படித்திருந்தாலும் கூட, அவள் சமைக்க வேண்டும், குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வேலைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பு இன்னமும் சமூகத்தில் இருக்கிறது.
பெண் வீட்டில் இருந்து, ஆண் வேலைக்குச் செல்லும் பட்சத்தில், அவன் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. இன்னொரு பக்கம் பெண் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறாள். இது இருவருக்கும் சுழற்சி முறையில் நடந்து கொண்டே இருக்கும். அப்போது இருவருக்கும் ஒரு விதமான சலிப்பு ஏற்படும்.
மனப்பொருத்தம் பற்றி இங்கு யாருமே பெரிதாக பேசுவதில்லை; தம்பதிக்குள் அந்த மனப்பொருத்தம் மிக முக்கியமானதாக இருக்கிறது. அதற்கு அங்கு இடம் இல்லாத பொழுது, தங்களது எண்ண அலைகளை, தன்னுடைய விருப்பத்திற்கு ஒத்த, இன்னொருவரோடு பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை இருவரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அது அவர்களுக்கு சுவாரஸ்யமானதாகவும் மாறுகிறது. இன்னொரு விஷயம் உடல் தேவை; ஒரு பெண் உடல் தேவை விஷயத்தில், தனக்கான விருப்பம் குறித்து பேசினாலே, அவளை தவறான ஒரு பெண்ணாக இந்த சமூகம் பாவித்து விடுகிறது.
ஆனால், ஆண் தரப்பில் அது பெரிதாக இல்லை. முதலில், தம்பதிகளுக்குள் எதையுமே பேசுவதற்கான முழு சுதந்திரம் உருவாக வேண்டும்.
ஆணின் விருப்பத்திற்கு தேவையான உடல் தேவையை மனைவி நிறைவேற்றாத பொழுது, அந்த ஆண் வெளியே இன்னொரு பெண்ணை தேடிக் கொள்கிறான்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண்ணானவள் திருமணத்திற்கு பின்னதாக தன்னுடைய நட்பை அப்படியே தொலைத்து விடுகிறாள்.
மிகவும் அரிதான தம்பதிகளுக்குள்ளேயே அந்த நட்பானது நீடித்துச் செல்கிறது. ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. ஆண்களுக்கு அவர்களின் நட்பானது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று தன்னைவிட வயது மூத்த பெண்களிடம் ஆண்கள் உறவு வைத்துக் கொள்கிறார்கள்.
அந்த உறவை பொருத்தவரை அதில் அந்த ஆணுக்கு பெரிதாக பொறுப்பு கிடையாது, ரிஸ்க் என்ற ஒன்று கிடையாது, இவர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இவையெல்லாம் அந்த உறவு சகஜமாக உருவாக காரணமாக இருக்கின்றன.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்