'சும்மா சும்மா 'ரீமேக்'ன்னு சொல்லாதீங்க.. இதுக்கு வேற பேர் இருக்கு'- கோபமான வருண் தவான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'சும்மா சும்மா 'ரீமேக்'ன்னு சொல்லாதீங்க.. இதுக்கு வேற பேர் இருக்கு'- கோபமான வருண் தவான்

'சும்மா சும்மா 'ரீமேக்'ன்னு சொல்லாதீங்க.. இதுக்கு வேற பேர் இருக்கு'- கோபமான வருண் தவான்

Malavica Natarajan HT Tamil
Dec 16, 2024 03:04 PM IST

தனது பேபி ஜான் படத்தை ரீமேக் படம் என்று திரும்ப திரும்ப சொல்லாதீர்கள். அந்தப் படம் ரீமேக் அல்ல என நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.

'சும்மா சும்மா 'ரீமேக்'ன்னு சொல்லாதீங்க.. இதுக்கு வேற பேர் இருக்கு'- கோபமான வருண் தவான்
'சும்மா சும்மா 'ரீமேக்'ன்னு சொல்லாதீங்க.. இதுக்கு வேற பேர் இருக்கு'- கோபமான வருண் தவான்

இது ரீமேக் அல்ல

இந்த படம் குறித்த பேச்சுகள் எப்போது எழுந்தாலும் அதனை நடிகர் விஜய்யின் தெறி படத்தின் ரீமேக் என்றே பலரும் கூறி வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால், கோவமடைந்த அப்படத்தின் கதாநாயகனான வருண் தவான், பேபி ஜான் படத்தை ரீமேக் படம் என கூற வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பேபி ஜான் படம் நடிகர் விஜய்யின் தெறி படத்தை காட்சிக்கு காட்சி அப்படியே எடுக்கவில்லை. அதனால் இது ரீமேக் படம் அல்ல. இதற்கு தழுவல் என்ற பெயர் உள்ளது. அதனால் பேபி ஜான் படத்தை தெறி படத்தின் தழுவல் என கூறலாம் என்றார்.

ஏமாந்து தான் போவீங்க

தமிழில் அட்லி இயக்கிய இந்த படத்தை இந்தியில் காளிஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியான சமயத்தில் பெரும்பாலான காட்சிகள் தெறி படத்துடன் ஒத்துப் போனதால் விஜய் ரசிகர்கள் பேபி ஜான்படத்தை ஒரு காட்சி கூட மாறாமல் ரீமேக் செய்துள்ளதாக விமர்சித்து வந்தனர்.

ஆனால், இயக்குநர் அட்லி இந்தக் கதையை கூறும் போதே கதையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் எனக் கூறினார். நீங்கள் தெறி படத்தை பார்த்து விட்டு அதே போல் இருக்கும் என எண்ணி பேபி ஜான் படத்தை பார்க்க வந்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

அதனால் நான் மீண்டும் சொல்கிறேன் பேபி ஜான் ரீமேக் படம் அல்ல. அது தெறி படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். நிறைய ஃப்ரேம்களும், நிறைய கதை கோணங்களும் வித்தியாசமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

படம் நிச்சயம் மனசுல நிக்கும்

இந்தப் படத்தில் நாங்கள் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து பேசியுள்ளோம் என்றார்.

அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் பாலிவுட் பிரபலமான சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அந்தக் கதாப்பாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடிக்கும் எனவும் கூறினார்.

கீர்த்தி சுரேஷ் பாலிவுட் என்ட்ரி

இந்தப் படத்தில், இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இதுவரை கவர்ச்சி உடை அணிந்து நடிக்காத அவர், ஹிந்தியில் கவர்ச்சியாக உடையணிந்து நடித்ததாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், 'பேபி ஜான்' படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே படம் மீது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து படத்தில் இருந்து முதல் பாடலாக ’நைன் மடாக்கா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடல் வெளியான நாள் முதல் பல நடிகை நடிகர்களும் ரீல்ஸ் வெளியிட்டு பாடலை பிரபலமாக்கி வருகின்றனர்.

வைரலாகும் பாடல்

இர்ஷாத் கமில் எழுதிய இந்தப் பாடலுக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற பாடகர்களான தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீக்‌ஷிதா வெங்கடேசன் என்கிற தீ ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை வெளிக்கொண்டு வரும் வகையில் அதிரடி பெப்பி பாடலாக இது அமைந்தது.

பேபி ஜான் படம்

இந்த படத்தில் வருண் தவான், ஜாக்கி ஷெராஃப், வாமிகா கபி, சான்யா மல்கோத்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தென் இந்தியாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.அட்லீ மற்றும் சினி1 ஸ்டுடியோஸுடன் இணைந்து ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் ’பேபி ஜான்’ படத்தை, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. படம் டிசம்பர் 25, 2024 அன்று வெளியாகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.