அடித்து நொறுக்கினாரா அட்லி.. தயாரிப்பாளராக கிடைத்த லாபம் எவ்வளவு? பேபி ஜானின் பாக்ஸ் ஆஃபிஸ்?
அட்லியின் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் பேபி ஜான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குநர் ஏ.காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் நடிகர் விஜய் நடித்து வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில், நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் 25 ஆம் தேதியையொட்டி பேபி ஜான் திரைப்படம் வெளியானது. முன்னதாக இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படம் மக்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தப் படம் வெளியாகி மூன்று நாட்கள் கூட முடியாத நிலையில், இதன் வசூல் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பேபி ஜான் திரைப்படம் ரூ. 11.25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், வருகிற வாரயிறுதி நாட்களில் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் பாக்ஸ் ஆஃபீசில் பெரும் தொகையை பதிவு செய்யும் என்றும் படக்குழு சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்