Babloo Prithiveeraj: ‘பொம்பள சோக்கு வேணுமே’ - மீண்டும் பப்லுவுடன் இணைந்த ஷீத்தல்? - உறுதிபடுத்திய போட்டோ!
திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், படத்திற்கான பார்ட்டி நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பப்லுவும் கலந்து கொண்டார். கூடவே அவரது காதலியான ஷீத்தலும் கலந்து கொண்டிருக்கிறார்.
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரது பலரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அனிமல். இந்தப்படத்தில் நடிகர் பப்லு பிரித்விராஜ் வில்லனாக நடித்திருந்தார். படத்தில் அவர் வெளிப்படுத்திய வில்லனிசம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், படத்திற்கான பார்ட்டி நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பப்லுவும் கலந்து கொண்டார். கூடவே அவரது காதலியான ஷீத்தலும் கலந்து கொண்டிருக்கிறார்.
முன்னதாக, தன்னை விட மிகவும் வயது குறைவான ஷீத்தலை பப்லு காதலித்து வந்த நிலையில், அது தொடர்பாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
ஆனாலும் அதனை கண்டு கொள்ளாத இருவரும், ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து, தங்களுடைய நடவடிக்கைகள் குறித்து வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகவும் பரவியது.
இதனிடையே இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால், இதனை இருவருமே உறுதி செய்யவில்லை.
அனிமல் தொடர்பான பேட்டிகள் கொடுத்த பப்லுவும், அந்த கேள்விக்கு மழுப்பலான பதில்களையே கொடுத்தார். பிரச்சினை இப்படியான பார்வையை பெற்றிருந்த நிலையில், இருவரும் இணைந்து அனிமல் பார்ட்டிக்கு வந்திருப்பது மீண்டும் இருவரும் இணைந்து விட்டார்களா? என்ற கேள்வியை ஏற்படுத்தி இருக்கிறது. என்னவோ போங்க பாஸ்!
டாபிக்ஸ்