Baakiyalakshmi: நைட் பார்ட்டியில் இனியா; பாக்யா பக்கம் சாயும் கோபி; அதிர்ச்சியில் ராதிகா; பாக்கியலட்சுமி சீரியலில் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Baakiyalakshmi: நைட் பார்ட்டியில் இனியா; பாக்யா பக்கம் சாயும் கோபி; அதிர்ச்சியில் ராதிகா; பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

Baakiyalakshmi: நைட் பார்ட்டியில் இனியா; பாக்யா பக்கம் சாயும் கோபி; அதிர்ச்சியில் ராதிகா; பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 20, 2024 02:29 PM IST

Baakiyalakshmi: அதிர்ச்சியடைந்த கோபி, இதற்கு நீங்கள் என்னை விஷம் கொடுத்தே கொன்று விடலாம் என்று சொல்ல, இடையில் கோபமடைந்த அவனது அப்பா, இன்னும் கொஞ்சம் நேரம் நீ இங்கு இருந்தால், நான் அதையும் செய்தே விடுவேன் என்று கொந்தளிக்க, கோபியை வெளியே தள்ளி ஈஸ்வரி கதவை சாத்தினாள். - பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

Baakiyalakshmi: நைட் பார்ட்டியில் இனியா; பாக்யா பக்கம் சாயும் கோபி; அதிர்ச்சியில் ராதிகா; பாக்கியலட்சுமி சீரியலில் இன்று
Baakiyalakshmi: நைட் பார்ட்டியில் இனியா; பாக்யா பக்கம் சாயும் கோபி; அதிர்ச்சியில் ராதிகா; பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

காப்பாற்றிக்கொண்டு வந்த பாக்யா 

இதற்கிடையே, பார்க்கில் பாக்யாவை பார்த்த மயூ உண்மையைச் சொல்ல, ராதிகாவுக்கு தெரியாமல், மயூவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, உண்மையை வெளிக்கொண்டு வந்தாள் பாக்யா. இந்த நிலையில், ஈஸ்வரி நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், கோபி அம்மாவுக்கு எதிராக சாட்சி சொல்லி இருந்த நிலையில், பின்னர் வருந்தினான். 

தொடர்ந்து அம்மாவிடம் அவன் சென்ற போது, ஈஸ்வரி அவனிடம்… நீ என்னுடைய மகனே கிடையாது. உன்னை நான் தலைமுழுகுவதாக சொன்னார். இதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றகோபி ராதிகாவிடம், உங்களால்தான் எனக்கு இந்த நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டான். இந்த நிலையில், இன்றைய தினம் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கலாம்.

பிடிவாதமாக இருக்கும் ஈஸ்வரி

தவறு செய்து விட்டோமே என்று உணர்ந்த கோபி, அம்மாவைத் தேடி வீட்டிற்கு வந்தான். ஆனால், அவனை கண்டபடி திட்டிய ஈஸ்வரி, நடிக்காதே... உன்னை நம்பி நான் பட்டதெல்லாம் போதும். இனி நீ எனக்கு மகனே கிடையாது என்று கூறினாள். 

அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோபி, இதற்கு நீங்கள் என்னை விஷம் கொடுத்தே கொன்று விடலாம் என்று சொல்ல, இடையில் கோபமடைந்த அவனது அப்பா, இன்னும் கொஞ்சம் நேரம் நீ இங்கு இருந்தால், நான் அதையும் செய்தே விடுவேன் என்று கொந்தளிக்க, கோபியை வெளியே தள்ளி ஈஸ்வரி கதவை சாத்தினாள். இதையடுத்து நொந்து போய் வெளியே வந்த கோபி, அம்மா.. எவ்வளவு முறையோ என்னை மன்னித்தீர்கள்.. அது போல இந்த ஒரு முறை என்னை மன்னிக்கக்கூடாதா என்று நினைத்துக்கொண்டு, சோகமாக நடந்து வருகிறான்.

சோகத்தில் எழில் 

இன்னொரு பக்கம் தயாரிப்பாளரை சந்திக்கச் சென்ற எழில், வீட்டிற்கு சோகமாக வந்தான். இதனையடுத்து பாக்யா, என்ன விஷயம் என்று கேட்க, சொன்ன நேரத்திற்குள் கதையையே சொல்ல முடியவில்லை, அப்படி இருக்கும் போது, சொன்ன தேதிக்குள்  நீ எப்படி கதையை எடுத்து முடிப்பாய் என்று சொல்லி, படம் கை கழுவி போனதை சொல்லி, வேதனை அடைந்தான். மேலும், தனக்கு இனி சினிமாவே வேண்டாம் என்று பேப்பரை அப்படியே வீசி விட்டு சென்றான். இதைப்பார்த்து வருத்தப்பட்ட பாக்யா.. கடவுளே எங்களை ஏன் இப்படி சோதிக்கிறாய் என்றாள். 

இதற்கிடையே, இனியாவை அவளது நண்பி, வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு அழைக்க, அவள் வரவில்லை என்று கூறுகிறாள். ஆனால், நண்பர்கள் அனைவரும் அவளை கண்டிப்பாக வரவேண்டும் என்று வற்புறுத்த, அவள் வருகிறேன் என்று கூறினாள். மற்றொரு பக்கம் ராதிகா, மயூவை எப்படி பாக்யா என்னுடைய அனுமதி இல்லாமல் கோர்ட்டிற்கு அழைத்து வரலாம் என்று கோபியிடம் கேட்க, அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டான் கோபி.. இதைக்கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைந்தாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: