பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 26 எபிசோட்: அதிர்ச்சி கொடுத்த இனியா.. வீட்டை விட்டு வெளியேறும் கோபி, ஈஸ்வரி
பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 26 எபிசோட்: யுபிஎஸ்சி தேர்வு எழுத செல்லும் ஆகாஷை, நேரில் பார்த்து இனியாவை வாழ்த்துகிறாள். இந்த விஷயம் கோபி, ஈஸ்வரிக்கு தெரிய வர உச்சக்கட்ட கோபம் அடைகின்றனர். இதனால் பாக்யா வீட்டில் மீண்டும் பிரச்னை வெடிக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 26 எபிசோட்: இனியா, பாக்யா, எழில் மூவரும் வீட்டுக்கு வந்ததும், ஈஸ்வரி மற்றும் கோபி அவர்களை நிற்க வைத்து இனியாவிடம் எங்கே போய்ட்டு வர என்று கேட்கிறார்கள். ரெஸ்டாரண்டுக்கு என்று சொல்ல, அதுக்கு முன்னாடி எங்க போயிருந்த என்று கேட்கிறான் கோபி. இனியாவும் ஆகாஷ் எக்ஸாம் எழுத போனான். அதான் வாழ்த்த போனேன் என்கிறாள். இதைக்கேட்ட ஈஸ்வரி, கோபி கடும் கோபம் அடைகின்றனர்.
இது பிரச்னையா தெரியல
பின்னர் இருவரும் இனியாவை திட்ட, நான்தான் அவளை கூட்டிட்டு போனேன் என் கூறுகிறான் எழில். அப்போது கோபி, அவ சொன்னா, நீ அவளுக்கு புத்திமதி சொல்லி இருக்கணும். எதுக்கு அவளை அங்க கூட்டிட்டு போகணும். ஒரு அண்ணனா நடந்துக்க மாட்டீயா என்கிறான். இந்த சமயத்தில் பாக்யா பக்கமாக திரும்பும் ஈஸ்வரி, நீ என்ன சிலை மாதிரி நிக்குற. உனக்கு இதெல்லாம் தெரியுமா என்று கேட்கிறாள்.
அவளும் அவுங்க ஆகாஷ் வீட்டுக்கு போய் வாழ்த்து சொல்லிட்டு, நேரா ரெஸ்டாரண்ட் தான் வந்தாங்க. இது ஒரு பெரிய பிரச்னை மாதிரி தெரியலை பாக்யா சொல்கிறாள். இதனைக்கேட்டு கடுப்பான ஈஸ்வரி, கோபி ஆகியோர், இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. நீ பார்த்து இருக்க வீட்டுக்கு போயிட்டுவோம் என கோபியிடம் சொல்கிறாள் ஈஸ்வரி. அப்போது கோபி உனக்காக தான் இந்த வீட்டுக்கு வந்தேன். இங்க நான் இருக்க காரணமும் நீதான் என சொல்கிறான்.
இனியா கொடுக்கும் அதிர்ச்சி
அப்போது இனியா யாரும் எதிர்பார்த்திராத விதமாக, நான் எப்போ டாடி உங்களை வர சொன்னேன். பாட்டி கூப்பிட்டாங்கன்னு தான வந்தீங்க என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். உடனே, ஈஸ்வரி உங்களுக்கு நான் என்ன செஞ்சாலும் நன்றி இருக்காது. நாங்க கிளம்புறோம் என்கிறாள். அப்போது பாக்யா அத்தை என்று கூப்பிட, நீ கால்ல விழுந்து கெஞ்சினாலும் நான் போகாம இருக்க மாட்டேன் என்கிறாள் ஈஸ்வரி. அதற்கு பாக்யா மாத்திரை எடுத்துட்டு போங்க என்று சொல்ல, ஈஸ்வரி வாயடைத்து போகிறாள்.
இதனையடுத்து இருவரும் வீட்டை விட்டு கிளம்புகின்றனர். இதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு என காட்டப்பட்டு, இனியா தனது படிப்பை முடித்து விட்டு, ரிப்போர்ட்டராக வேலைக்கு சேர்கிறாள். மற்றொரு பக்கம் ஈஸ்வரி, கோபி தனியாக வசிக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பாக்கியலட்சுமி நேற்றைய எபிசோட்
எழில் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இன்று யுபிஎஸ்சி தேர்வு நடைபெற உள்ளதாக அதில் கூறப்பட்டது. இதைக் கேட்ட இனியாவிற்கு ஆகாஷின் நினைப்பு வர ஆரம்பித்தது. இதனால், எப்படியாவது ஆகாஷிடம் பேசி அவனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என தவித்துக் கொண்டிருந்தாள்.
இதனால், எழிலிடம் போன் வாங்கி ஆகாஷிற்கு போன் செய்யலாமா வேண்டாமா என்ற தயக்கத்திலேயே இருந்து பின் எழிலிடமே உண்மையை சொன்னாள். இதைக் கேட்ட எழில் ஷாக் ஆகி, நீ ஆம்மாவுக்கு வாக்கு கொடுத்திருக்க. அதையும் மீறி ஆகாஷ்கிட்ட பேசுறேன்னு சொன்ன எனஅன அர்த்தம் என கேட்டான்.
நான் வாக்கு கொடுத்ததையும் மீறி பேசுறேன்னு சொன்னது தப்பு தான். ஆனா, இன்னைக்கு அவன் எக்ஸாம் எழுதுறான். அவனுக்கு விஷ் பண்ணதான் போன் கேட்டேன் என்றாள். பின். எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி சாமியிடம் சென்று ஆகாஷிற்காக வேண்டினாள். இதைப் பார்த்த எழிலுக்கு மனம் மாறியது.
உடனே இனியாவை அழைத்துக் கொண்டு ஆகாஷை பார்க்கக் கிளம்பினான். முதலில் இனியாவை வாசலிலே நிறுத்தி வைத்துவிட்டு, எழில் மட்டும் உள்ளே சென்று, ஆகாஷிடம் பேசினான். பின் உனக்கு வாழ்த்து சொல்ல இனியா வந்திருப்பதாகக் கூறி இனியாவா உள்ளே அழைத்தான். பின், ஆகாஷ் இனியாவை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வழிந்தது. இனியாவும் ஆகஷை அடிபட்ட காயங்களுடன் பார்த்து சோகமானாள். பின் ஆகாஷிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு வீட்டிற்கு வெளியே காத்திருந்தாள்.
இந்த சமயம் பார்த்து ஆகாஷின் அப்பா வீட்டிற்கு வர, இனியாவை கண்டபடி திட்ட ஆரம்பித்தார். அவருடைய சத்தம் கேட்டு வெளியே வந்த எழிலும் ஆகாஷும் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தும் முடியவில்லை. இதனால், எழில் இனியாவை கூட்டிக் கொண்டு பாக்கியாவின் ரெஸ்டாரண்டிற்கு கிளம்பினான்.
இருவரும் அங்கு சென்று பாக்கியாவையும் செல்வியையும் பார்த்து, தாங்கள் இருவரும் ஆகாஷை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வந்ததாக எழில் கூறினான். இதைக் கேட்ட செல்வியும் பாக்கியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். பின், செல்வி, என் வீட்டுக்காரர் ஏதும் பிரச்சனை செய்தாரா எனக் கேட்க எழில் அதெல்லாம் எதுவும் இல்லை என சமாளித்தான்.
பின், தான் தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த இனியாவை பாக்கியா சமாதானம் செய்தாள், நீ எந்த தப்பும் பண்ணல. அப்படி நீ எதாவது பண்ணுனா நான் சொல்லுவேன் எனக் கூறியதுடன், இனியாவை நார்மலாக மாற்ற கடையின் அக்கௌண்ட்ஸை பார்க்க சொன்னாள்.
இதற்கிடையே, ஆகாஷின் அப்பா பாக்கியாவின் வீட்டிற்கு வந்து கோபியிடமும், ஈஸ்வரியிடமும் சண்டை போட்டு சென்றார், இதனால் உசச்க்கட்ட கோபத்திற்கு சென்ற இருவரும் இனியா, எழில் மேல் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், பாக்கியாவுடன் வீட்டிற்கு வந்த இனியாவிடம் கோபி கோபத்தில் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

டாபிக்ஸ்