பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 19 எபிசோட்: இனியாவிற்கு வாக்கு கொடுத்த பாக்கியா.. கலங்கும் ஆகாஷ்.. பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 19 எபிசோட்: இனியாவிற்கு குடும்பத்தின் எதிர்ப்புகளை மீறி கோபியும் ஈஸ்வரியும் திருமண ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் இனியாவிற்கு பாக்கியா வாக்கு கொடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 19 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா, தன் வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகன் ஆகாஷை காதலித்தை ஏற்றுக்கொள்ள முடியாத பாக்கியா, தூரத்து சொந்தத்தை இனியாவை பெண் பார்க்க அழைத்து வந்தாள். அவர்களுக்கும் இனியாவை பிடித்துப் போனதால், நாளைக்கே திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும் என ஈஸ்வரி முடிவெடுத்துவிட்டாள்.
ஈஸ்வரியிடம் சண்டை போட்ட குடும்பம்
வெளியாட்கள் முன் எதுவும் பேசவேண்டாம் என நினைத்த குடும்பத்தினர் அனைவரும் அவர்கள் சென்றவுடன் ஈஸ்வரியிடம் சண்டைக்கு நின்றனர். பாக்கியா, செழியன், எழில், ஜெனி, அமிர்தா என ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை கொஞ்சம் கூட காதில் வாங்காத ஈஸ்வரி தனக்கு தோன்றியதை தான் செய்வேன் என இருக்கிறார்.
உங்க பையனோட நிறுத்திகோங்க
இதனால் கடும் கோபமடைந்த பாக்கியா, நீங்க உங்க பையன் வாழ்க்கையில முடிவெடுக்குறதோட நிறுத்திக்கோங்க. என் பொன்னு வாழ்க்கையில முடிவெடுத்தா அவ்வளவு தான் என எச்சரித்தார். அத்தோடு நில்லாமல், வீட்டுல பெரியவங்களா பாத்து கல்யாணம் பண்ணி வச்சு என் வாழ்க்கை வீனா போனது போதும். வந்து பாக்கும் போது எல்லாம் நல்லவன் வேஷம் தான் போடுவாங்க. ஆனா வாழ்ந்து பாத்தா தான உண்மை தெரியும் என கோபியை நேரடியாகவே தாக்கிப் பேசினார்.
இனியாவிற்கு சத்தியம் செய்த பாக்கியா
இதை கொஞ்சம் கூட சீரியஸாக எடுத்துக் கொள்ளாத ஈஸ்வரியும் கோபியும் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்யத் தயாராகினர். இதைப் பார்த்து பயந்த இனியா எனக்கு இந்த கல்யாணம் வேணாம். நான் படிக்கணும். நான் வேணும்ன்னா ஹாஸ்டலுக்கு போயிடுறேன் என பாக்கியாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். அப்போது, பாக்கியா, நான் உன் அம்மா. இந்த கல்யாணத்த நடக்க நான் விடமாட்டேன் என இனியாவிற்கு சத்தியம் செய்தார்.
இனியாவை மூளை சலவை செய்த கோபி
இன்னொரு பக்கம், இனியாவை கோபியும் ஈஸ்வரியும் சேர்ந்து சமாதானம் செய்தனர். உன் வாழ்க்கையில் நல்ல விஷயம் நடக்க போகுது. இப்போதைக்கு நிச்சயதார்த்தம் தான். அதுக்கு அப்புறம் உனக்கு எப்போ அந்த பையன பிடிக்குதோ அப்போ கல்யாணத்த வச்சிக்கலாம் என கோபி சமாதனம் செய்து கொண்டிருந்தார். அதோடு நில்லாமல், இந்த நிச்சயதார்த்தம் மூலம் தான் உன் மீது நம்பிக்கை வரும் என்றும் கூறினர். அவர்களிடம் இனியா பதிலே பேசாமல் அமைதியாக இருந்தார்.
ஆகாஷை விசாரித்த பாக்கியா
இந்த நிலையில், பாக்கியா, ஆகாஷை பார்த்து விசாரிக்க சென்றார். அப்போது, ஆகாஷ் தன் உடைந்த கையை நினைத்து வருந்துவதாக செல்வி கூறினாள். அத்தோடு ஆகாஷை நினைத்து அவனது தம்பி தங்கை வருந்தியதால், பாக்கியாவிடம் வீட்டில் யாரும் முகம் கொடுத்து கூட பேசவில்லை. பின் அவர்களை சமாதானம் செய்த பாக்கியா ஆகாஷை விசாரித்துவிட்டு கிளம்பினாள்.
இனியாவிற்காக கலங்கிய ஆகாஷ்
அப்போது, பாக்கியாவை கூப்பிட்ட ஆகாஷ், எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். பின், ஆகாஷிடம் பாக்கியா விசாரிக்கையில், இனியா எப்படி இருக்கிறாள் என விசாரித்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத செல்வி, இனியா அவங்க வீட்ல இருக்கு அது நல்லா தான் இருக்கும் என சொல்ல, நீ இனியாவ பத்தி கவல படதா நான் பாத்துக்கிறேன் என சொன்னார். அப்போது, ஆகாஷ் அவளை அடிக்காதீங்க எனவும் கூறி கலங்கினான்.

டாபிக்ஸ்