பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 14 எபிசோட்: சிதறிய செழியன்.. பதறிய பாக்யா.. இடி மேல் இடி வாங்கும் இனியா!
பாக்கியலட்சுமி: ஒரு அண்ணனாக செழியனின் பார்வையிலிருந்து நீங்கள் யோசியுங்கள் என்றாள். ஆனால் அதற்கு பிடி கொடுக்காத பாக்யா, அதற்கு ஆகாஷை அடிப்பது தீர்வு அல்ல.

பாக்கியலட்சுமி: பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியும், செழியனும் ஆகாஷை அடித்து விட்ட நிலையில், இதைக்கேட்டு பாக்கியலட்சுமி கொதித்து எழுந்தாள். அதே கொதிப்பில், அது குறித்து செழியனிடம் வாக்கு வாதம் செய்து அவள் அவனை அடித்த நிலையில், அதைப்பார்த்த ஜெனி நீங்கள் உங்களுடைய பார்வையில் இருந்து மட்டுமே யோசிக்கிறீர்கள்.
ஒரு அண்ணனாக செழியனின் பார்வையிலிருந்து நீங்கள் யோசியுங்கள் என்றாள். ஆனால் அதற்கு பிடி கொடுக்காத பாக்யா, அதற்கு ஆகாஷை அடிப்பது தீர்வு அல்ல. செல்வி ஒருவேளை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தால், செழியனின் வாழ்க்கை என்ன ஆகும் என்று கேட்டாள். இதையடுத்து உள்ளே வந்த கோபி, நீ எல்லா விஷயத்திலும் தெளிவாக முடிவெடுப்பாய்.
உள்ளே வந்த கோபி
ஆனால், இனியாவின் விஷயத்தில் மட்டும் தான் நீ அந்த செல்விக்கு ஆதரவாக முடிவெடுக்கிறாய் என்றார். கூடவே பாக்யாவின் மாமியார் உனக்கு செல்வி மகன் மீது இருக்கக்கூடிய அக்கறை, இனியாவின் மீது இருப்பது போல தெரியவில்லையே என்று சீண்டினார். ஆனாலும், அதற்கெல்லாம் பரிந்து போகாத பாக்யா, செழியனை மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் டென்ஷனான ஜெனி, நீங்கள் ஆகாஷை இவர்கள் அடித்ததற்காக கோபபடுகிறீர்கள்.
அப்படி இருக்கும் பொழுது செழினை நீங்க அடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றாள். இதைக்கேட்ட பாக்யா நான் உன் புருஷனை அடித்தது தவறுதான். ஆனால், உன்னுடைய புருஷன் செய்த காரியம் சரியா என்று கேட்க, அதைக் கேட்ட ஜெனி, அவன் தரப்பில் அவன் செய்தது நியாயம்தான் என்றாள். இதைக் கேட்ட பாக்யா அதிர்ச்சி அடைந்தாள்.
பூதாகரமாக வெடித்த பிரச்சினை
ஒரு கட்டத்தில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதற்கிடையே எழில், ஆகாஷை மருத்துவமனையில் நேரடியாக சந்தித்து, நலம் விசாரித்து, சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவனிடம், கோபி எங்கு சென்று வருகிறாய் என்று கேட்டான்.
அதற்கு அவன் ஆகாஷை பார்த்து வருகிறேன் என்று கூறினான். இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த கோபி இவ்வளவு நடந்தும், நீ அங்கு சென்று வந்திருக்கிறாய் என்றால், உனக்கு என்ன தைரியம் என்று கேட்டான். இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதால்தான், இது இவ்வளவு மறைவாக முடிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல, இதைக்கேட்ட எழில், கோபி ராதிகாவுடன் இருந்த விஷயத்தை குறிப்பிட்டு பேச, குறுக்கே வந்த பாட்டி பாக்யா இதைச் சொல்லிக் கொடுக்கச் சொன்னாளா என்றாள். இதையடுத்து உள்ளே வந்த பாக்யா, தேவையில்லாமல் என்னை இதில் இழுக்காதீர்கள் என்று சாடினாள்.
மாறி மாறி எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, இதை கேட்ட இனியா இந்த பிரச்சினை தொடர்பாக நான் அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுத்து விட்டேன். இனிமேல் நான் ஆகாஷிடம் பேச மாட்டேன்.உங்களுக்கு இது தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றினால், என்னை அடியுங்கள், என்னை காயப்படுத்துங்கள்; இல்லை நான் இந்த வீட்டில் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நான் வெளியே சென்று விடுகிறேன் என்றாள். இது கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.

டாபிக்ஸ்