பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 12 எபிசோட்: விசுக்கு விசுக்கு போறவ.. மாமியார் கொடுத்த வசையடி! - திருப்பி அடித்த பாக்யா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 12 எபிசோட்: விசுக்கு விசுக்கு போறவ.. மாமியார் கொடுத்த வசையடி! - திருப்பி அடித்த பாக்யா!

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 12 எபிசோட்: விசுக்கு விசுக்கு போறவ.. மாமியார் கொடுத்த வசையடி! - திருப்பி அடித்த பாக்யா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 12, 2025 12:00 PM IST

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 12 எபிசோட்: பாக்கியலட்சுமி இப்படி பேக்கை மாட்டிக் கொண்டு வேலை வேலை என்று இருந்த காரணத்தினால்தான், இனியா இப்படி இன்னொருவரோடு சொல்வதற்கு தயாராகி விட்டாள் என்றார் இனியா பாட்டி!

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 12 எபிசோட்: விசுக்கு விசுக்கு போறவ.. மாமியார் கொடுத்த வசையடி! - திருப்பி அடித்த பாக்யா!
பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 12 எபிசோட்: விசுக்கு விசுக்கு போறவ.. மாமியார் கொடுத்த வசையடி! - திருப்பி அடித்த பாக்யா!

திருப்பி அடித்த பாக்யா

மேலும் பேசிய இனியா பாட்டி, பாக்கியலட்சுமி இப்படி பேக்கை மாட்டிக் கொண்டு வேலை வேலை என்று இருந்த காரணத்தினால்தான், இனியா இப்படி இன்னொருவரோடு சொல்வதற்கு தயாராகி விட்டாள் என்றார். இந்த நிலையில் கடுப்பான பாக்கியலட்சுமி, ஒரு குழந்தை வளர்ப்பில் பெண்ணுக்கு மட்டும் பங்கு கிடையாது. ஆணுக்கும் பங்கு இருக்கிறது.

ஆகையால் இது போன்ற வார்த்தைகளையெல்லாம் என்னிடம் பேசாதீர்கள். இந்த சம்பவத்தில் இனியாவிடம் என்ன பேச வேண்டுமோ, அதை நான் பேசிவிட்டேன். இந்த பிரச்சினையை எப்படி அணுக வேண்டுமோ அப்படி அணுகிகொள்கிறேன்.  நீங்கள் உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்லி கிளம்பினாள். இதைப்பார்த்த இனியாவின் பாட்டி அதிர்ச்சி அடைந்தார். 

கோபியும் நீங்கள் பேசியது தவறு என்று அம்மாவிடம் கூறினான். பாக்கியலட்சுமி ஹோட்டலுக்கு வந்தாள். எதுவும் நடக்காதது போல, செல்வி ஹோட்டலுக்கு வரவில்லையா என்று சக ஊழியர்களிடம் அவள் சக ஊழியர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து நின்றனர். 

அதனை தொடர்ந்து செல்வியை ஹோட்டலுக்கு அழைக்க வேண்டும் என்று சொல்லி, அவள் வீட்டிற்கு சென்றாள். பாக்கியலட்சுமி செல்வியை கூப்பிட்ட மாத்திரத்தில், தன்னை மன்னித்து விடும்படியும், தான் இது போன்ற தவறுகளில் ஈடுபட்டிருக்க மாட்டேன் என்பது உனக்கு நன்றாகத் தெரியும் என்றும் செல்வி கதறினாள். அதை புரிந்து கொண்ட பாக்கியலட்சுமி, எனக்கு உன்னைப் பற்றி நன்றாக தெரியும். 

வெளுத்து விட்ட கோபி 

இது குழந்தைகளின் வயது கோளாறு காரணமாக நடந்துவிட்டது. அதனால், நீ எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே என்றாள். மேலும், ஆகாஷிடம் இது நீ படிக்க வேண்டிய வயது; இனியாவிடம் நான் பேசிவிட்டேன். அவள் இனிமேல் உன் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டாள். நீயும் உன்னுடைய லட்சியத்தை அடையும் வரை இதுபோன்ற எந்த விஷயங்களிலும் ஈடுபடமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு என்று சொல்ல, அவனும் அதன்படியே செய்து கொடுத்தான். இந்த நிலையில்தான் இனியாவின் போனுக்கு போன் வந்தது. அதில் ஏ என்று குறிப்பிட்டு இருந்த நிலையில், போன் செய்தது ஆகாஷ்தான் என்று நினைத்து கோபியும், எழிலும் அவனை வீட்டிற்க்கே சென்று வெளு வெளுவென வெளுத்தார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளை பார்க்கலாம். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.