பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 10 எபிசோட்: காதல்.. காதல்.. காதல்.. இடியாப்ப சிக்கலில் இனியா.. கோபியை பந்தாடிய பாக்கியா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 10 எபிசோட்: காதல்.. காதல்.. காதல்.. இடியாப்ப சிக்கலில் இனியா.. கோபியை பந்தாடிய பாக்கியா!

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 10 எபிசோட்: காதல்.. காதல்.. காதல்.. இடியாப்ப சிக்கலில் இனியா.. கோபியை பந்தாடிய பாக்கியா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 10, 2025 12:55 PM IST

பாக்கியலட்சுமி: இனியாவின் பாட்டி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி இனியாவை வசைபாடினாள். இதற்கிடையே உள்ளே வந்த கோபி, இனி நீ கல்லூரிக்கு என்னுடன் தான் வர வேண்டும். வீட்டிற்கு திரும்புவதும் என்னுடன் தான் என்று கூறினான்.

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 10 எபிசோட்: காதல்.. காதல்.. காதல்.. இடியாப்ப சிக்கலில் இனியா.. கோபியை பந்தாடிய பாக்கியா!
பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 10 எபிசோட்: காதல்.. காதல்.. காதல்.. இடியாப்ப சிக்கலில் இனியா.. கோபியை பந்தாடிய பாக்கியா!

இதைக் கேள்விப்பட்ட பாக்கியலட்சுமி கோபமானாள். இதனையடுத்து கோபியின் பக்கம் சென்ற அவள், இதுவரை நீங்கள் செய்தது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டது, என்னுடைய பிள்ளைகளுக்காகதான்; இனி நீங்கள் இந்த வீட்டில் இருக்கக்கூடாது வெளியே செல்லுங்கள் என்று தடாலடியாக சொல்லிவிட்டாள். இதைக்கேட்ட கோபி அதிர்ச்சியில் உறைந்தான்’ இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

இன்றைய தினம் நடந்தது என்ன?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் இனியாவை குடும்பமே சேர்ந்து கண்டித்துக் கொண்டிருந்தது. ஆனால், அவனது அண்ணன் மட்டும் அவளுக்கு கொஞ்சம் ஆதரவாக பேசினான். இதைக்கேட்ட மீதம் உள்ளவர்கள் கடுப்பாகினர்.

இனியாவின் பாட்டி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி இனியாவை வசைபாடினாள். இதற்கிடையே உள்ளே வந்த கோபி, இனி நீ கல்லூரிக்கு என்னுடன் தான் வர வேண்டும். வீட்டிற்கு திரும்புவதும் என்னுடன் தான்.

உனக்கு போனெல்லாம் இனி கிடையாது. நீ செய்யும் ஒவ்வொரு விஷயமும் கண்காணிக்கப்படும் என்று சொல்ல, இனியா கதறி அழுதாள். இதையடுத்து ஓரமாக அமைதியாக இருந்த பாக்கியாவிடம் சென்ற இனியா, செல்வியின் மகனிடம் தானே முதலில் காதலை சொன்னதாகவும், அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த அவனை, தானே பேசி சம்மதிக்க வைத்ததாகவும் கூறினாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்யா நீயும், அவனும் பேசும்பொழுது, செல்வி அவனை கண்டித்தாள். அப்பொழுது கூட நம்முடைய பிள்ளைகளை நாம்தான் நம்ப வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

கோபத்தில் பாக்யா 

ஆனால், நீயே தற்போது இப்படி செய்து வந்திருக்கிறாயே என்று கோபத்தில் கொந்தளித்தாள். ஆனாலும் விடாத இனியா, அவன் தன்னிடம் நன்றாக பேசியதாகவும், தனக்கு நிறைய இடங்களில் அறிவுரைகளை கூறியதாகவும் கூற, பாக்யா பொறுமை இழந்தாள்.

தொடர்ந்து பேசிய இனியா, அவன் இன்று ஏழ்மையில் இருக்கிறான். நாளைக்கு நிச்சயம் கலெக்டர் ஆவான் என்று சொல்லி சமரச பேச்சுவார்த்தைக்கு இழுத்தாள். ஆனால் பாக்யா விட்டுக் கொடுக்கவில்லை. சடாரென கோபமான பாக்யா, அதற்கு இப்போது அவனை உனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டுமா.. போய் படிக்கிற வேலையை பார் என்று எச்சரித்தாள்’ அத்தோடு இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.