அய்யனார் துணை சீரியல் ஜூன் 11 எபிசோட்: கவிதா ஆன் தி லைன்..கிளியராகுமா சேரனின் மேரேஜ் ரூட்;பயத்தில் நடுங்கும் தம்பிகள்..
அய்யனார் துணை சீரியல் ஜூன் 11 எபிசோட்: சேரனுக்கு கவிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. சோழனிடம் அவள் சேரனிடம் பேச வேண்டும் என்று சொல்ல, சேரன் பேசினான். அப்போது கவிதா நீங்கள் பெண் பார்த்து சென்றதற்கு பின்னர் பல மாப்பிள்ளைகள் வந்தும் எனக்கு பெரிதாக யாரையும் பிடிக்கவில்லை.

அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் சேரனிடம் கவிதா கூட்டுக்குடும்பத்தில் வாழ சம்மதித்து விட்டார். உடனடியாக உனக்கும் அவருக்கும் கல்யாணம் செய்து விடலாம் என்றும் தம்பிகள் அவசரப்படுத்தினர். தனியாக பார்க்கும் பொழுது கவிதா தனிக்குடித்தனம் என்பதை கறாராக கூறியிருந்த நிலையில் எப்படி திடீரென இந்த மாற்றம் நடந்தது என்று சேரனும் குழம்பினான். அதே சிந்தனையில் ஆழ்ந்தும் போனான்.
மறுநாள் காலை சிந்தனை தவறி அவன் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, நிலா அங்கு வந்து உங்களுக்கு கவிதாவை பிடிக்கவில்லையா என்று கேட்டாள். அதற்கு சேரன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு இந்த மாற்றத்தில்தான் பெரிய சந்தேகம் இருக்கிறது என்று கூறினார்.
குழப்பமடைந்த நிலா
உண்மையை எப்படி இப்படி மறைத்து கொண்டே இருப்பது என்று நிலா யோசித்தாலும், வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தாள். இந்த விஷயத்தை சோழனிடம் பேசும் போது ஒரு சில நல்ல விஷயங்கள் நடப்பதற்கு பொய் கூறினால் தவறு ஏதும் இல்லை என்று கூறினான். ஆனாலும் நிலா எப்படி இருந்தாலும் இந்த விஷயம் அடிக்கடி நிகழும் சந்திப்புகளில் தெரிந்து விடுமே என்று கூற, அதை நடக்காமல் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சோழன் கூறினான்.