அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: தனி குடித்தனம் கண்டிஷன்.. கிடுப்பிடி கேள்வி கேட்ட தம்பிகள்.. கலங்கிய சேரன்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: தனக்காக சோழன் இப்படி உதவுவதைப் பார்த்த நிலா அவனைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் நிலா ஆதார் கார்டு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்க, அவளது அண்ணி அவளுக்கு போன் செய்து ஆதார் கார்டு நம்பரை தவறாக சொல்லி விட்டதாகவும், அந்த நம்பர் தன்னுடையதுதான் என்றும் கூறினார்.
மேலும், தான் ஆதார் கார்டு கிடைப்பதற்கு உதவியது அண்ணனுக்கு தெரிந்து விட்டதாக கூறிய அண்ணி இனி தன்னால் உதவ முடியாது என்று கூறிவிட்டாள். இந்த நிலையில் ஏற்கனவே சோகத்தில் இருந்து நிலா இன்னும் வருத்தமடைந்தாள். இதைப் பார்த்த சோழன் ஆதார் கார்டு கிடைப்பதற்காக ப்ரோசிங் சென்டர் சென்றான். ஆனால், அங்கு அவர்கள் முகவரி ஆவணத்தை கேட்டனர். இதனால் அங்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
முயற்சி செய்தான்
போன் கடைக்கு சென்று இழந்த எண்ணை எடுத்து விடலாமென்று முயற்சி செய்தால், அங்கும் முகவரிக்கான அடையாளத்தை கேட்டனர். இந்த நிலையில் சோழன் யார் யாருக்கோ போன் செய்து இந்த பிரச்சினையை தீர்க்க முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தான்.