அய்யனார் துணை சீரியல் ஜூன் 07 எபிசோட்: சேரனை தனிக்குடித்தனம் அழைக்கும் மணப்பெண்.. ஆதார் கார்டு நம்பரால் அவதியான நிலா!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 07 எபிசோட்: இருவரும் ஆதார் கார்டு எடுப்பதற்கு கடைக்குச் சென்றனர். அங்கு ஆதார் கார்டு எடுப்பதற்கு ஓடிபி சரிபார்த்தல் நடைமுறை இருந்தது.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 07 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் அண்ணி நிலாவின் அண்ணனுக்கு தெரியாமல் ஆதார் கார்டு நம்பரை அவளுக்கு அனுப்பி வைத்தாள். இதை தெரிந்து கொண்ட நிலா ஆதார் கார்டு வந்துவிட்டால், பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு முயற்சி செய்யலாம்; விவாகரத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நினைத்து சந்தோஷம் அடைந்தாள்.
சோழன் விட்ட பாடில்லை
தொடர்ந்து அதனை சோழனிடம் சொல்ல, அவன் கடுப்பானான். தொடர்ந்து, ஆதார் கார்டு நம்பரை வைத்து ஆதார் கார்டை எடுத்துவிடலாம் என்று நிலா கடைக்கு கிளம்ப, சோழனும் உடன் வருகிறேன் என்று கூறினான். ஆனால் நிலா தயவுசெய்து வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லியும், அவன் விட்ட பாடு இல்லை.
இந்த நிலையில் இருவரும் ஆதார் கார்டு எடுப்பதற்கு கடைக்குச் சென்றனர். அங்கு ஆதார் கார்டு எடுப்பதற்கு ஓடிபி சரிபார்த்தல் நடைமுறை இருந்தது. ஆனால், நிலா ஆதார் கார்டுடன் இணைத்த சிம்மை முன்னமே தூக்கி போட்டு விட்டதால், அந்த ஓடிபியை எடுக்க முடியாத சூழல் உருவானது.