அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: பாய் பெஸ்டி போன்கால்.. விவாகரத்து கேட்ட நிலா.. சிதறிய சோழன்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: இன்னொரு பக்கம் சோழனும் நிலாவும் காரில் சென்று கொண்டிருந்த நிலையில், ஆதார் கார்டு விரைவில் வந்தவுடன் நாம் நம்முடைய விவாகரத்துக்கு அப்ளை செய்ய வேண்டும் என்று நிலா கூற, சோழன் சோகமானான்

அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் நேற்றைய தினம் கார்த்திகாவின் வீட்டில் அவளுக்கான கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் அங்கு வேண்டுமென்றே சென்ற நடேசன், அவர்களை வம்பிழுக்கும் வகையில் கார்த்திகாவின் வீட்டிற்கு முன்னே அங்குமிங்குமாக நடந்து சென்றார்.
கடுப்பான கார்த்திகா குடும்பம்
இதைப் பார்த்த கார்த்திகாவின் குடும்பத்தினர் கடுப்பாகினர். தொடர்ந்து அங்கிருந்து சென்ற நடேசன் வழியில் புரோக்கரை சந்தித்து, என்னுடைய மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் அதற்கான வேலைகளைப் பார் என்று ஆர்டர் போட்டார்.
வீட்டில் சேரன், சோழன், நிலா, பல்லவன், பாண்டி எல்லோரும் விறகடுப்பில் சிக்கன் சாப்பாடு சமைத்து சாப்பிட்டனர். அனைவரும் சேரனிடம் சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது என்று பாராட்ட, சேரனும் மிகவும் சந்தோஷம் அடைந்தான். அதனைத் தொடர்ந்து எல்லோரும் கூடி சந்தோசமாக தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.