அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: நடேசன் பார்த்த வேலை.. நிலாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட சோழன்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: நடேசன் பார்த்த வேலை.. நிலாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட சோழன்..

அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: நடேசன் பார்த்த வேலை.. நிலாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட சோழன்..

Kalyani Pandiyan S HT Tamil
Updated Jun 02, 2025 01:10 PM IST

அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: ஒரு கட்டத்தில் அவள் சேரனை பார்த்து ஓ ராமா என்று அழத்தொடங்கினாள். சேரன் எவ்வளவு சமாதானம் கூறியும், அவள் கேட்ட பாடில்லை. இதையடுத்து தம்பிகளும் நிலாவை சமாதானப்படுத்தினர்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: நிலாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட சோழன்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: நிலாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட சோழன்!

கதறி அழுத நிலா

ஒரு கட்டத்தில் அவள் சேரனை பார்த்து ஓ ராமா என்று அழத்தொடங்கினாள். சேரன் எவ்வளவு சமாதானம் கூறியும், அவள் கேட்ட பாடில்லை. இதையடுத்து தம்பிகளும் நிலாவை சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் சோழன் நிலாவை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்று நிதானப்படுத்தி சமாதானப்படுத்தினான். அடுத்த நாள் சேரன் சோழனிடம் கார் வேண்டும் என்று சொல்ல, அவன் வாடகை விஷயத்தில் கறார் காட்டினான்.

இதனையடுத்து சேரன் வாடகை அதிகமாக இருக்கிறது, கொஞ்சம் குறைத்துக்கொள் என்று கூற, குறுக்கே வந்த நிலா, கார் ஓனர் நீங்கள்தானே?ஏன் இவ்வளவு வாடகை கேட்கிறீர்கள் என்றாள். இதைக்கேட்ட நடேசன், கார் இவனுடையது இல்லை சோழன் வெறும் டிரைவர்தான் என்று உண்மையை கூறி விட்டார். இதில் கடுப்பான நிலா, சோழன் பொய் சொன்னதை தெரிந்து கொண்டாள்.

தொடர்ந்து கொந்தளித்த நிலா, ஏன் இப்படி பொய் சொன்னீர்கள்; எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள் சாடினாள். அவளை சோழன் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவள் கேட்டபாடில்லை.

இந்த நிலையில், அடுத்த நாளும் நிலாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் சோழன் இறங்கினான். ஆனால், நிலா அப்போதும் செவி சாய்க்க வில்லை. அப்போது சோழன் நீங்கள் எல்லோரிடமும் நன்றாக பேசுகிறீர்கள்.

ஆனால், என்னிடம் நீங்கள் அப்படி இருப்பதில்லை. என்னிடம் அதற்கான ஸ்பேசை நீங்கள் கொடுக்கவில்லை என்று காரணங்களை அடுக்கினான். இருப்பினும் நிலா கோபப்பட்டுச் சென்றாள். இதனையடுத்து சோழன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான்.