அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: கார்த்திகாவிற்கு குட் சர்ட்டிபிகேட் கொடுக்கும் சேரன்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: கார்த்திகாவை திருமணம் செய்யவுள்ள குடும்பத்திடம் அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் நல்ல விதமாக பேசி அவர்களுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார் சேரன்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: கார்த்திகாவிற்கு குட் சர்ட்டிபிகேட் கொடுக்கும் சேரன்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், சேரனை திருமணம் செய்ய உள்ளதாக சொல்லி அவரை கோவிலில் காக்க வைத்து கார்த்திகா ஏமாற்றியதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அவள் மீது கோவமாக உள்ளனர். ஆனால், இப்படி எந்த விஷயமும் நடக்காதது போல் சேரன் தன் தம்பிகளிடம் நடந்து கொண்டு வருகிறான்.
கார்த்திகாவை பற்றிய விசாரணை
இந்த நிலையில், சேரனும் பாண்டியனும் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் சாலையில் செல்லும் போது, கார்த்திகாவை திருமணம் செய்து கொண்டு செல்லும் வீட்டில் இருந்து ஒருவர் வந்து கார்த்திகா பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தார்.